ரஜனி காந்தின் இந்து மதவெறி

சிவசேனை தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் போன்றவர்” என்று நடிக‌ர் ரஜினி காந்த் கூ‌றினா‌ர்.

திராவிடக்  கட்சிகள்  செழித்த  தமிழ்நாட்டில்  நடிகர்  ரஜனி  போன்ற மதவெறியர்கள்  எப்படிக் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது  ஆய்வுக்குரியதே.

மும்பைக்கு சென்ற நடிகர் ரஜினி காந்த், ந‌ே‌ற்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த சந்திப்பின் போது, மராத்தி மொழிப் படங்களில் நடிக்க தான் பெரிதும் விரும்புவதாக தாக்கரேயிடம் ரஜினி காந்த் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த், சிவசேனை தலைவர் பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என்றார்.

இந்நிலையில் மும்பை சென்ற ரஜினி காந்த், ஹிந்தி திரையுலகில் உள்ள தனது நண்பர்களுக்கு தான் நடித்த எந்திரன் படத்தை சிறப்பு ஏற்பாட்டின் மூலம் திரையிட்டுக்காட்டினார்.

10 thoughts on “ரஜனி காந்தின் இந்து மதவெறி”

 1. எந்திரன் படம் ஓடுவதற்கு யார்,யாரெல்லாம் உதவுவார்களோ அவர்கள் எல்லாம் கடவுள் அல்லாது வேறூ யார்?

  1. தமிழ்மாறனின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள்,

   அப்படியே கலைஜரையும் மருமக்கலையும் சேர்த்து , ஒரு ஜோக் சொல்லுங்கள், இருந்தும் மாறன் சகோதரர்களையொத்து “தமிழ்மாறன்” என்கிற பெயரும் அலர்ஜியைத்தருகிறது,

 2. ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருப்பவன் அதே மதத்தை சேர்ந்த ஒருவரை மதித்து நடப்பதில் என்ன மதவெறி இருக்கிறது அன்பரே? உண்மையில் இப்டி பேசி பேசியே மத வெறியை விதைக்கும் மதவாதி நீங்கள்தான் 

 3. இவர் மட்டும் இப்படி அல்ல. சினிமா கூத்தாடிகளே! இப்படித்தான்.அட கூத்தாடிகள் தான்
  இப்படித்தான் என்றால் அதற்கு கதைவசனம் எழுதுகிறவனும் பக்கவாத்தியம் வாசிக்கிறவனும் அப்படிதானே.அல்லது கதைவசனம் எழுதுகிறன் தனது குடும்பத்தையே
  அரசபரம்பரை “ரேஞ்சுக்கு” கொண்டு வந்த விட்டுப்பானா!.
  இரவுநேரங்களில் கடைவாசல் ஒட்டு ஒடிசல் நிலம்மெல்லாம் வீடு இல்லாதவர்கள் “கவுஸ்புல்”.பக்கவாத்தியகாரன் அவன் தன்பாட்டிற்கு புதுத்தத்துவம்.
  “எல்லா பெருமையும் ஆண்டவனுக்கே! வந்த பணம் எல்லாம் என் பெட்டிக்குள்ளே!!”
  நாம தான் சிந்தித்து காரியம் ஆற்றனும்.

  1. காசு சம்பாதித்து,கஜ்சா அடித்து வாழ்ந்து கொண்டிருந்த ரசனியை,ரசனிக்கு அரசியல் எனும் மாயமான் வித்தையைக் காட்டியவன் சோ ராமசாமி.தன்னை முதல்வராக ரசனி கனவு காண் வைத்தது.இது அரசியல்வாதிக்கு பிடிக்காததால் ரசனி கன்னடராகி,மராட்டியராகி,இப்போது இந்தியராகி மன்மோகன் சிங்கிற்கே மசாலா வடை கொடுக்கிற உறவாக வளர்ந்திருக்கிறது.நேற்றய விசரன்,இன்றய நடிகன் நாளக்கு யாரோ? இன்றூ எந்திரன் வடிவில் நிற்கிறது.

 4. HELLO GUYS. THE TODAY’S RAJINI is MADE BY YOU NOT BY HIMSLEF. NOW IT IS TOO LATE TO CRY OVER THE SPILT MILK. IT IS NOT FIVE THOUSANDS OR TEN THOUSANDS BUT MILLIONS OF DOLLAR BUSINESS, SO HE HAS TO APPROACH THE RIGHT PEOPLE TO MAKE HIS MONEY, OTHERWISE HE IS IN TROUBLE. THE PRODUCERS , CAMERAMEN, MUSCIANS AND EVERYONE COMPLETELY WILL DEPEND ON ONE RAJINI. SO IT IS HIS RESPONSIBLE TO MAKE IT HAPPEN. . THERE IS NOTHING WRONG WITH HIM. I DON’T WATCH HIS MOVIES BUT I AM TELLING THE TRUTH. WHY YOU GUYS ARE UPSET FOR THIS SIMPLE MATTER. IT IS NOT EVEN A BLOODY NEWS TO BE PUBLISHED IN THIS SITE.

Comments are closed.