10 இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுப்பு!

tamilnadu44தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 10 இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சேகரித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 பேரில் இந்த 10 பேரும் அடங்குகின்றனர்.

வயது மற்றும் உடல் நலம் என்பவற்றை கருத்திற் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் அவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை தமிழக பொலிஸ் நிராகரித்துள்ளது. தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது