”க்ரீன் கண்ட்” குறி வைக்கப்பட்டுள்ள இந்திய அறிவு ஜீவிகள்.

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் துணை இராணுவப்படையில் முகாம் ஒன்றிர்குள் புகுந்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டனர். ஏராளமான நவீன ஆயுதங்களை கைப்பற்றிச் சென்றுள்ள மாவோயிஸ்டுகள் மேலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சம் நிலவுகிற அதே வேளையில் இத்தாக்குதல் தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகங்களும் மத்திய உள்துறை அமைச்சகமும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் எல்லையோரங்களில் வாழும் பழங்குடிகளுக்காகப் பேசும் இடது அறிவு ஜீவிகளை அல்லது போர் நிறுத்தம் கேட்கும் அறிவு ஜீவிகளை குறிவைத்து தாக்குதல் ஒன்றைத் துவங்கியுள்ளார்கள்.

 கடந்த இரண்டு நாட்களாக மாவோயிஸ்ட் ரொமாண்டிசிஷம் என்கிற பதத்தை மவோயிஸ்டுகளுக்கு எதிராக பயன்படுத்தும் ஊடகங்கள் இத்தாக்குதலை மையப்படுத்தி அறிவு ஜீவிகள் மீது காழ்ப்பைக் கொட்டி வருகிறது. அருந்ததி ராய் உள்ளிட்ட அறிவுஜீகள் எவருமே மாவோயிஸ்டுகளின் அப்பாவி ஜவான்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்சிஸ் இந்துவார் என்னும் லோக்கல் காவல்துறை அதிகாரியைக் கடத்தி மாவோயிஸ்டுகள் கொலை செய்த போது கூட அதைக் கண்டித்து எழுதினார்கள் அவர்கள்.

தவிறவும் இம்மாதிரியான தாக்குதல் தங்களின் போராட்ட நோக்கங்களை பின்னுக்குத் தள்ளி விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்திய அரசின் போரை எல்லா தரப்பினரும் நியாயப்படுத்தி விடும் பொதுப்புத்திக்கு கொண்டு வந்து விடும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கட்டவிழ்த்து விட்டுள்ள க்ரீன் கண்ட் போர் ஒட்டு மொத்த பழங்குடி மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து நிற்கிறது என்பதையோஇ பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்தியா செய்து கொண்டுள்ள கனிம ஒப்பந்தங்களுக்கானது என்பதையோ எந்த ஊடகங்களும் பேச வில்லை.

மாவோயிஸ்டுகள் மேற்கொண்டுள்ள தாக்குதலை ஒட்டு ரெட் டெரரிசம் என்னும் சொல்லைப் பயன்படுத்தும் ஊடகங்கள் மற்ந்தும் பழங்குடி மக்களின் பிரச்சனைகளையோ  அன்றாடம் சல்வாய்ஜூடும் போன்ற பயங்கரவாத அமைப்புகளால் மக்கள் கொல்லப்படுவது குறித்தோ பேசுவதில்லை.

  இந்திய அரசியல் பன்னாட்டு முதலாளிக்கான யுத்தமாகவும் சிதம்பரத்தின் தனிப்பட்ட ஆதாயங்களுக்கான யுத்தமாகவும் முன்னெடுக்கபப்டும் இக் கிரீன் கண்டிர்கு எதிராக பேசும் எல்லா முற்போக்குச் சக்திகளின் வாயை அடைக்கவுமே முழு அளவிலான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது இந்திய ஆளும் வர்க்கம்.

  இந்த கொல்லப்பட்டுள்ள 24 பேரின் சடலத்தை வைத்து போரைத் தீவிரமாக்கி ப்ழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட போரை தீவீரப்படுத்தவும் இந்தியா தயாராகி வருகிற நிலையில்இ மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி ‘’எங்கள் மீதும் மக்கள் மீது இந்தியா நடத்திக் கொண்டிருக்கிற க்ரீன் கண்ட் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்திருக்கிறார். பொதுவாக போர்ச்சூழல் காரணமாக எழுந்துள்ள இப்போக்கை இந்தியா முற்போக்கு அறிவு ஜீவிகளை நசுக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது.