‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ம் : கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சிறை ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையு‌ம் ம‌ற்று‌ம் அவரது 5 படகுகளையு‌ம் ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ப் போ‌ரா‌ட்ட‌த்‌தில‌் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌‌ப் போரா‌ட்ட‌த்‌தா‌ல் 10 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படகுக‌ள் கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை. இதனா‌ல் கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், இலங்கைககடற்படையினரசெய்துவருமஅட்டூழியத்தைககண்டுகொள்ளாமலஇருக்குமமத்திய, மாநிஅரசுகளைககண்டித்து ‌மீனவ‌ர்க‌ள் ச‌ங்க‌ம் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

மேலு‌ம் இபபிரச்னைக்குததீர்வகாணுமவரை‌யி‌ல் காலவரம்பின்றி வேலைநிறுத்தத்திலஈடுபடுவதஎனவுமஅசசங்கத்தினரதீர்மானமநிறைவேற்றியுள்ளனர்.