‌பார‌ம்ப‌ரிய முறை மா‌‌‌‌‌றியது: சீனா செ‌‌ன்றா‌ர் நேபாள ‌‌பிரதம‌ர்!

23.082008.

சீன‌த் தலைநக‌ர் ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் நட‌ந்து வரு‌ம் ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்‌டி‌யி‌ன் ‌நிறைவு ‌விழா நாளை நடைபெறு‌கிறது. இ‌வ்‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்ள நேபாள ‌பிரதம‌ர் பு‌ஷ்ப கம‌ல் தா‌ல் எ‌ன்ற ‌பிரச‌ண்டா 5 நா‌ள் பயணமாக இ‌ன்று ‌சீனா செ‌ன்றா‌ர்.

நேபாள ‌பிரதம‌ர் ஒருவ‌ர் அய‌ல்நா‌ட்டு பயணமாக முத‌லி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வராம‌ல் வேறொரு நா‌ட்டு‌க்கு செ‌ல்வது இதுவே முத‌‌ன்முறையாகு‌‌ம்.

நேபாள நா‌ட்டி‌ன் பார‌ம்ப‌ரிய முறை‌ப்படி அ‌ந்நா‌ட்டி‌ல் ‌பிரதமராக பத‌வியே‌ற்கு‌ம் ஒருவ‌ர் அய‌ல்நா‌ட்டு பயணமாக வேறொரு நா‌ட்டு‌க்கு செ‌ல்வத‌ற்கு மு‌ன்னா‌ள் முத‌லி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருவது வழ‌க்க‌ம்.

‌சீனா செ‌ன்று‌ள்ள பு‌ஷ்ப கம‌ல் தா‌ல் வரு‌ம் ‌தி‌ங்க‌ள் ‌கிழமை அ‌‌ங்கு அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ஹூ ‌ஜி‌ண்டாவோ-வை ச‌ந்‌தி‌த்து‌‌ப் பே‌சு‌கிறா‌ர். இதையடு‌த்து ‌பிரதம‌ர் வெ‌ன் ‌ஜியாபோ, அ‌ந்நா‌ட்டு உய‌ர் அ‌திகா‌ரிகளையு‌ம் ச‌ந்‌தி‌க்‌‌கிறா‌ர்.