‘ஹன்ட் ஆபரேஷனை’ ​ நிறுத்தக் கோரி கொல்கத்தாவில் ஊர்வலம்!

 மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஹன்ட் ஆபரேஷனை’ -​ நிறுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதுபெரும் எழுத்தாளர்கள் மகா ஸ்வேதா தேவி  ​ மற்றும் தருண் சான்யா     உள்பட நக்ஸல் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

 ​ நக்ஸல் பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக 4 மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றபோது,​​ நக்ஸல் ஆதரவாளர்கள் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஊர்வலம் நடத்தினர்.  இதனால்,​​ நகரில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.​ ​

நக்ஸல் பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மேற்கு வங்கம்,​​ பிகார்,​​ ஒரிசா,​​ ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் கூட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கூட்டம் நடைபெற்ற அரசு தலைமைச் செயலகத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.