ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக அமைச்சர் ஆ. ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் .ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, .கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இந்த நோட்டீஸýக்கு 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொது நல வழக்குகள் மையம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன. அதன் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2008ல் நடந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிம விற்பனையில் மத்திய அமைச்சர் ராசாவுக்கு உள்ள தொடர்பு பற்றி சிபிஐ விசாரிப்பதை கண்காணிக்க உத்தரவிடவேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் மே 25ம் தேதி தள்ளுபடி செய்தது சரியானதல்ல என மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008ல் தொலைத்தொடர்பு சேவை தொடர்பான உரிமம் வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான விசாரணையை குழிதோண்டி புதைக்க அரசு முயற்சி செய்வதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

பெயர் 

 

.

தெரியாத தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடுத்துள்ளதுடன், பல மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில் யாருக்கு எதிராக இந்த விசாரணை நடக்கிறது என்பதே தெரியவில்லை என சிபிஐ கூறுவது எப்படி என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொலைத்தொடர்பு சேவை உரிம அனுமதி வழங்கியதில் அரசு ஊழியர்களுக்கும் தனி நபர்களுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இது கிரிமினல் சதி என்று தான் கூறவேண்டும். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணை சார்ந்த ஆவணங்களை சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடம் இருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப்பெறவேண்டும். மேலும் இந்த விசாரணை தொடர்பான அவ்வப்போதைய நிலவரம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். வுக்கும் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ராடியா என்பவருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் பதிவு அடங்கிய ஒலிப்பதிவையும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த உரையாடல் பதிவு நாடா சிபிஐ வசம் 9 மாதங்களாக உள்ளது. ஆனால் விசாரணைக்காக ராடியா அழைக்கப்படவில்லை. அரசியல் செல்வாக்கு மிக்க சிலரை காப்பாற்றவே விசாரணை தடுக்கப்படுகிறது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் ராசா இலாகாவின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத்துறை, 2008ல் ரூ.1658 கோடி என்ற மிகக் குறைந்த விலையில் 122 ஆபரேட்டர்களுக்கு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அலைக் கற்றையை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2ஜி உரிமங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர்களுக்கு ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ராசா முன்வருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.மனுதாரர்கள் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அமைச்சர் ராசாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தபோதிலும் இது பற்றி சிபிஐ விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என பிரசாந்த் பூஷன் வாதிட்டார்

One thought on “ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக அமைச்சர் ஆ. ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்”

  1. அரசியல்வாதிகளை விஞ்சிய சக்தியாக நீதிமன்றம் ஒன்று இந்தியாவில் தீர்ப்பளித்துவிட முடியுமா, அப்படித்தீர்ப்பு வருமாக இருந்தால் . இந்தியா விலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் சிறைக்கைதிகளாகி, நீதிபதிகள் அரச அதிகாரிகளெல்லாம் தூக்குத்தண்டனைக்கைதிகளாகி, 42.1/2 கோடி பிச்சைக்காரர்கள் தவிர மற்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளாகி , ஒரு புதுயுக இந்தியாவுக்கான வாசல் திறக்கப்பட்ட வரலாறு உண்டாகிவிடும், சிபிஐ என்ன சுப்ப்றீம் கோர்ட்டும் சாக்கடைதான் இந்தியாவில்,ஓவர்,

Comments are closed.