ஷாங்காய் மாநாட்டில் ரஷ்யாவுக்கு ஆதரவு!

28.08.2008
தெற்கு ஒசெட்டியாவில் ரஷ்யா எடுத்து வரும் சமாதான நடவடிக்கைக ளுக்கு சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் உடன் இணைந்து ரஷ்யா நிறைவேற்றிய 6 அம்ச சமா தானத் திட்டத்தை ஷாங் காய் அமைப்பு நாடுகள் வரவேற்றுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கஜக்ஸ்தான், சீனா, கிரிகிஸ்தான், டாஜிக்ஸ்தான், ரஷ்யா மற் றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர் களாக உள்ளன. இந்நாடு களின் மாநாடு டாஜிக்ஸ் தானில் உள்ள துஷான்பே நகரில் வியாழனன்று நடந்தது.

தெற்கு ஒசெட்டியா பிரச்சனைக்கு தீர்வு காண ஆகஸ்ட் 12-ல் மாஸ்கோ ஏற்றுக் கொண்ட 6 அம்ச சமாதானத்தை மாநாடு வர வேற்கிறது என்றும், இப்பகு தியில் அமைதியும் ஒத்து ழைப்பும் நிலவ ரஷ்யா மேற் கொள்ளும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிப் பதாகவும் இம்மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை கூறுகிறது.

தெற்கு ஒசெட்டியா மீது ஜார்ஜியா நடத்திய படை யெடுப்பை அறிக்கை குறிப் பிடவில்லை. எனினும் ஜார்ஜியா மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடத்தியதாக மேலை நாடுகள் கூறுவதற்கு முற்றிலும் எதிர்நிலை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவை எவ்வாறு ‘தண் டிப்பது’ என்று விவாதிப் பதற்காக ஐரோப்பிய ஒன்றி யம் கூடவுள்ள வேளையில் இந்த அறிக்கை வெளியாகி யுள்ளது.

ரஷ்யாவின் சமாதான முயற்சிகளைப் புரிந்து கொண்டு அதனை சரியான முறையில் மதிப்பீடு செய்த ஷாங்காய் அமைப்பு தலை வர்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் நன்றி கூறினார். ஜார்ஜி யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயலும் நாடுகளுக்கு இந்த அறிக்கை எச்சரிக்கையாக அமையும் என்று மெத்வதேவ் கூறி னார்.

டிஸ்கின்வலியில் அமை தியாக வாழும் மக்கள் மீது ஜார்ஜிய ராணுவம் தொடுத்த தாக்குதலை மேலை நாடுகள் அங்கீ கரிக்க மறுப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைவதாக கஜக்ஸ்தான் நூர்சுல்தான் நஜர்பயேங் தொலைக்காட் சியில் கூறினார். போரை ஜார்ஜியா தொடக்கியது. மக்கள் பலியாவதைத் தடுக் கவே ரஷ்யா நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா மீது தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிசீலித்து வருவதாக பிரான்ஸ் அயல் துறை அமைச்சர் பெர் னார்ட் கவுச்னர் கூறினார்.