வை.கோ மீது குற்றம் சுமத்தும் இலங்கை அரச உளவாளி கே.பி

இறுதி யுத்த  காலப் பகுதியில் புலிகளின்  சர்வதேசத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த  கே.பி,  அனைவருடனும்  தொடர்புடனிருந்தார். இந்திய உளவுத்துறை  புலிகளுடன்  தொடர்பிலிருந்த  அனைவரின் தொலைபேசியையும்  ஒட்டுக்கேட்கும்  வலிமையில்ருந்தது. வை.கோ இந்திய அரசிற்கு எதிராக எப்போதும் அரசியல்நிலைபாடு  எடுத்ததில்லை.  இந்த நிலை  இலங்கை அரசை நியாயப்படுத்தும் நோக்கோடு அதன் உளவாளியான கே.பி. அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாமல் போனதாக குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தகவல்கள் வை.கோவிடம் பரிமாறப்பட்டதாகவும் இதனை வை.கோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

13 thoughts on “வை.கோ மீது குற்றம் சுமத்தும் இலங்கை அரச உளவாளி கே.பி”

 1. ஒருவருக்குச் சிரிப்பு என்றால் மற்றவருக்கு கைப்பு இந்த விசயத்தில் நீதானப்பு முதல் வைப்பு.உன்னில தன்ர நம்பிக்கையை வைச்ச தலைவருக்கு நீர் வைச்சதுதான் ஆப்பு.இனிக் கதையும்,கதை பறயும் நம் எல்லோருக்கும் அல்வா தாரும் ஆனால் இப்ப அது அல்வா எணடது மட்டும் எல்லோருக்கும் புரியும்.நல்லாத்தான் வலை வீசுறீர்.ஈக்கள் மொய்க்காத ஒரு மீன் கடை வையும் பார்ப்போம்.

 2. கே பி ஐ எவ்வாறு அரச உளவாளி என்று கூறமுடியும்?
  வை கோ தான் தனது அரசியல் லாபத்திற்காக தடைக்கல்லாக நின்று தமிழ் மக்களிற்கு அழிவை ஏற்படுத்திய பச்சை சந்தர்ப்பவாதி. வை கோ தமிழ்நாட்டிலையா ஈழம் காணப்போகின்றார். கேபி சொன்ன மாதிரி இனியும் மிளகாய் அரைக்க முடியாது.

 3. செய்தியில் சிறிய தவறு உள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு புலிகள் முதலில் இணங்கியதாகவும் பின்னர் வைகோவின் எதிர்ப்பினால் பின்வாங்கியதாகவும் கேபி டிபிஎஸ் ஜெயராஜிற்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

  1. உங்களை பெற்ற தாய் தந்தையர்,உங்களை “டாய்லெட்டில் உள்ளதை” திங்கச் சொல்லுகிறார்கள் என்று வைப்போம்,”தின்பீர்களா?”.தாய் தந்தையர் சொல்லும் போதே செய்யாத நாம்,மிகப் பெரிய இயக்கம் நடத்திவிட்டு,சர்வதேச கட்டமைப்புகள்,வலைப் பின்னல்களையெல்லாம் நடத்திவிட்டு,”உயிர் போகிற விஷயத்தில்” வைக்கோ சொன்னார் செய்தார்கள் என்கிறீர்கள்!,யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்?.வைக்கோவுக்கும்,பிரபாகரனுக்கும் பரஸ்பர நம்பிக்கை இந்திய அமைதிப்படை காலத்தில் வைக்கோ வன்னி சென்று திரும்பும் போதே முரண்பட்டுவிட்டது!.அரசியல் ரீதியாக இருவரும் உணர்ச்சி ரீதியாக தொடர்புடன் இருந்தார்கள் அவ்வள்வுதான்,முக்கிய முடிவுகளில் இல்லை!.எல்லா இலங்கைத் தமிழரும் போல,”தேவைக்கேற்ற உறவாகத்தான்” வைக்கோ பயன்படுத்தப்பட்டார்!.வைக்கோ “தமிழீழ மிட்டாய்தான்” வேண்டும் என்று அடம் பிடித்தாராம்,இலங்கைத் தமிழர் அனைவரும்,”இந்திய மிட்டாய்தான்” வேண்டும் என்று அடம்பிடித்து அழுதார்களாம்!..அடப் போங்கடா!…

 4. குமரன் பத்மநாதனின் பேட்டி சந்தேகம் கொள்ளும்படியாக இல்லை. எங்கள் விருப்புவெறுப்புகளை தள்ளிவைத்துவிட்டு உண்மைகளை தேடமுயலேவண்டும். அதுதான் மனிநேயத்திற்கான தேடலின் முதற்படி.

  1. சோனியா காந்தி பிரபாகரனுக்கு தனி கெலிகொப்டெர் அனுப்புவதாகச் சொன்னார், ஆனால் நெடுமாறன் அதை விரும்பவில்லை. அதனால் இப்படியும் பிரபாகரனைக் காப்பாற்ற முடியவில்லை. கெ.பே பே இல்லை பீ பீ புதிதாக நக்கீரனுக் கொடுத்த பேட்டி.

  2. அண்ணா, (கெ) பீ… யண்ணா, கெலியை எதுக்கண்ணா நீங்க குடுக்கணும், கிளி நொச்சி வீழ்ந்தபிறகு, புதுக்குடியிருப்புக்கு கிட்ட இராணுவம் வரும் போதுதான், புதுமாத்தளனிலிருந்து 2 விமானம் எழுந்து, இறுதியாகா , கொழும்பைநோக்கி பறந்து சென்றது. தலைவர் தப்ப வேணும் எண்டு நினத்து இருந்தால் , அப்பவே அதில் ஏறிப்பறந்து இருப்பாருங்கோ. அண்ணா “பீ” யண்ணா , கண்டபடி கையிறு விடாதேங்கோ.

 5. த.வி.புலிகள் உளவு பார்த்தது உள்நாட்டு வெளிநாட்டு தமிழரிற்குள்ளேயும் அல்லது யாரவது சிங்களத் தலைவர்களையோ இராணுவ அதிகாரிகளையோ கொல்வதற்கு மட்டும் தான். வைகோ என்ன பண்ணுகின்றார் என்று சிந்தித்தார்களா? மேற்கு நாடுகள் என்ன செய்கின்றன என்பது பற்றிய அடிப்படை அறிவே புலிகளிற்கு இருந்ததில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. புலன்பெயர்ந்த புலி விசுவாசிகளும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களை பல மிக்க சமுதாயமாக மாற்றவேண்டுமேயே ஒழிய வைகோ நெடுமாறன் சீமான் குழுக்கள் போல் ஈழம் கிடைக்கும் தலைவர் வருவார் என்று புலம்பக் கூடாது. கூக்குரலிடும் இவர்கள் தமிழ் நாட்டினை தனிநாடு ஆக்க தங்கள் உயிரை முதல் விடட்டும் பார்க்கலாம். கே.பி இலங்கை அரசியலில் இறங்கி ஒரு பதவி வகிப்பராக இருந்தால் அவரை விமர்சிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கொண்டு அவரால் வேறென்ன என்ன செய்யமுடியும். சிறையிலிருந்து சாவதா?

 6. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மை தெரியுமா? ராஜபட்செவும், சோனியாவும் ,கருணாநிதியும் ஒரு ஹெலியில் பிர்பாகரனைக் காபாற்ற வன்னிக்கு மேல் வட்டமிட்டுக்க் கொண்டிருந்தனர். நெடுமாறனும், வைகோவும், நெடியவனுதான் ஹெலி தரையிரங்க வழியேற்படுத்தாமல் தடுத்டு விட்டனர்.

 7. One believes KP
  Another one does not believe KP

  What is true? Can we get to it through exercising pure reason or Aristotelian logic?
  May be The KP- Establishment is trying to stage a propaganda war against the Tamilnadu politician? Or Tamilnadu politicians had miscalculated and now hiding…
  One thing is certain at the last phase of war, the LTTE was desperately trying for a ceasefire and an agreement to surrender.. ..
  whereas Srl lankan government saw the best time for the genocide,

Comments are closed.