வைகோவை அச்சுறுத்தும் கருணாநிதி?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணிக்கான அச்சாரங்களை திமுக, அதிமுக துவங்கி விட்டது. இந்நிலையில் எப்படியாவது வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்கே இழுக்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பதாக ஊடகங்கள் ஊகச் செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்பு பேசிய பேச்சு இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இப்போது அவர் மீது குற்றச்சாடு பதிய இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றச்சாட்டு பதியப்பட்டது மதிமுக தலைவர்களான வைகோ மீதும் அப்போது அதன் அவைத் தலைவராக இருந்த கண்ணப்பன் மீதும். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணப்பன் பெயரை வழக்கிலிருந்து நீக்கி விட்டார் கருணாநிதி காரணம் கண்ணப்பன் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐய்க்கியமாகிவிட்டார். இப்போது வைகோவை மட்டுமே குறை வைத்து வழக்கு நகர்கிற்து.இந்த வழக்கு விசாரணை சென்னை 3வது செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 21 ந்தேதி வைகோ மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது வைகோ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.