வேலுப்பிள்ளையின் மரணச் சடங்கில் திருமாவளவன்

பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன.

 அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.

காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும்,

பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதே வேளை சிவாஜிலிங்கம் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய உளவுப்படையால் ஒழுங்கு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரவலான சந்தேகம் நிலவுகிறது.

“அன்னாரின் மனைவி பார்வதி வேலுப்பிள்ளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் உட்பட 3 பிரமுகர்கள இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக் தங்களுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

3 thoughts on “வேலுப்பிள்ளையின் மரணச் சடங்கில் திருமாவளவன்”

 1. என்னென்ன அற்புதங்களெல்லாம் எம்மைக் காத்துக்கிடக்கின்றன!

  “அன்னாரின் மனைவி பார்வதி வேலுப்பிள்ளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்த சிவாஜிலிங்கம் முதலில் கணவனும் மனைவியும் ஏன் கைதாக வேண்டும் என்று நண்பர் ராஜபக்சவிடம் கேட்டுச் சொல்வாரா?

  திருமாவளவன் கருணாநிதியின் ஆசிகளுடன் தான் வருகிறாரா?
  எவ்வளவு எளிதாக அவரால் வந்து போக முடிகிறது?

  எந்த அடிப்படையில் சிவாஜிலிங்கத்திடம் உடல் ஒப்படைக்கப்பட்டது? அவரைக் கைது செய்த ஆட்சி எப்படிஅவருக்கு நெருக்கமான சிவாஜிலிங்கத்தை விட்டு வைத்தது?

  “சிவாஜிலிங்கம் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக … ஒழுங்கு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரவலான சந்தேகம் நிலவுகிறது.”
  அவர் மட்டுமா?

  1. தமிழர்கள் கோவப்பட்டும் ,உணர்ச்சிவசப்பட்டும் முடிவ்வு எடுக்க போறார்களா…இல்லை…புத்திசாலித்தனமாயும்..அறிவு பூர்வமாகவும் எடுக்க போறீர்களா.. முதலாவதாய் முடிவு எடிக்கிறது எண்டால்…..வோட்டை…சிவாஜலிங்கத்துக்கு போடுங்கோ…. ரெண்டாவதாய்…..எண்டால்…..சரத்பொன்சேகாக்கு வோட்டை போடுங்கோ….

   1. சிவாஜிலிங்கத்திற்கோ சரத்பொன்சேகாவுக்கோ அல்லது மகிந்தவுக்குத்தன்னும் வாக்குப்போடுவதால் தமிழ் மக்களுக்கிடைக்கும் நன்மைதான: என்ன?

Comments are closed.