வெள்ளை மாளிகை, பாதுகாப்புச் செயலகம் மீது சைபர் தாக்குதல்

வட கொரியாவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் கணணி உள்ளீட்டாளர்களால், நடத்தப்பட்ட தாக்குதலில் அமரிக்க வெள்ளை மாளிகை, பென்டகன், தகவற் தொழில் நுட்ப அமைப்பு, பங்குச் சந்தை அலுவலகம் போன்றன கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. தவிர, தென் கொரிய அரசிற்குச் சொந்தமான பல இணையத் தளங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன.