வெளிநாடு வாழ் இந்தியக் கோடீஸ்வரர்களுக்கு விரைவில் வாக்குரிமை.

இப்போதும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடுதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு வளர்ந்த வல்லரசைப் போல உலகின் முன்னால் காட்டிக் கொள்கிறது. நாட்டில் பெரும்பாலானோர் வறுமையில் உழல மிகச்சிறிய இந்தியப் பெருமுதலாளிகளே இன்றைய இந்தியாவின் முகங்கள். இவர்கள்தான் இந்தியா. அரசு வரிப்பணத்தில் படித்து வெளிநாட்டில் வேலைக்குச் சென்று சம்பாதித்து அங்கேயே செட்டிலான இந்திய மேட்டுக்குடிகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் வரை தாய்நாட்டுப்பாசம் அதிகம். நீண்டகாலமாகவே தங்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனக்கோரி வருகிற இக்கூட்டத்தின் கோரிக்கை விரைவில் செயல்படுத்தப்படலாம். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விரைவில் வாக்குரிமை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே பேசியது: ளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போது வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வாக்களிக்கலாம். வெளிநாட்டில் குடியுரிமை பெற்று விட்ட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படமாட்டாது. பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் சென்றுவரும் வசதியும் விரைவில் கிடைக்கும் என்றார் மொய்லி. வெளிநாடுகளில் சுமார் 2.2 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.