வெனிஸ் திரைப்பட விழாவில் சாவேஸ்:மேற்கத்திய பிரச்சாரத்தை முறியடிக்கும் திரைப்படம்!

 

வெனிஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்த வெனிசுலா ஜனாதிபதி ஹூயூகோ சாவேஸூக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘சவுத் ஆப் பார்டர்’ என்ற திரைப் படம் திரையிடப்பட்ட போது அரங்கில் அமெரிக்க இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் உடன் சாவேஸ் நுழைந்தபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. 

ஐம்பது மெய்க்காப்பாளர்களுடன் நுழைந்த சாவேஸ் பார்வையாளர்களோடு கலந்துவிட்டார். சிலர் மேல் பூக்களை எறிந்தும், தன் இதயத்தின்மேல் வலதுகையை வைத்தும், புகைப்படக்காரரை இழுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னதும் பார்வையாளர்களைத் திகைக்க வைத்தது.

ஸ்டோனின் திரைப்படம் சாவேஸை ஸ்டோன் சந்தித்ததையும், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது போல் உண்மையிலே அவர் ஒரு அமெரிக்க எதிரியா என்பதை அறிய அவர் செய்த முயற்சிகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.

 
வெனிஸ் பட விழாவுக்கு பிரமுகர்கள் படகில் வந்து இறங்குவது வழக்கம். ஆனால், கடல் சூழல் ஒவ்வாமை காரணமாக சாவேஸ் ஹெலிகாப்டரில் விழா இடத்துக்கு வந்தார். ஸ்டோன் ஒரு கடினமான உழைப்பாளி என்று சாவேஸ் வர்ணித்தார். லத்தீன்-அமெரிக்கா வில் மறுபிறப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டோன் அதைத் தேடிக்கண்டுபிடித்தார் என்று சாவேஸ் தம் உரையில் குறிப்பிட்டார். அவருடைய கேமராவாலும், புத்திசாலித்தனத்தாலும் அம் மறுபிறப்பின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளார் என் றும் சாவேஸ் பாராட்டினார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்ற மேற்கத்திய உலகின் பிரச்சாரத்தை முறியடிக்கும் முயற்சியாகவோ ‘சவுத் ஆப் பார்டர்’ திரைப் படம் எடுக்கப்பட்டது என்று திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆலி வர் ஸ்டோன் கூறினார். மக்களின் அபரிமிதமான வாக்குகளால் சாவேஸ் வெவ் வேறு 12 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய தலைமையில் வெனிசுலா நல்ல பொருளாதார மேம்பாட்டை அடைந்துள்ளது என்றும் ஸ்டோன் பாராட்டினார்.

ஏழு ஜனாதிபதிகள், சிலியுடன் சேர்த்தால் எட்டு நாடுகள் வாஷிங்டனின் கருத்துக்கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்றுள்ளதைக் காணமுடிகிறது. ஆனால், அமெரிக்க மக்களுக்கு இதை யாரும் கூறுவதில்லை என்றும் அவர் சுட்டினார்.