வீரவன்ச உண்ணாவிரதம் : அரசியல் பிரமுகர்கள் கருத்து

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சிங்கள பௌத்த அடிப்படை வாதியான விமல் வீரவன்சவை அமைச்சர் விமல் வீரவன்சவைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமச்சந்திர ஆகியோர் இன்று முற்பகல் வருகை தந்துள்ளனர்.
உண்ணாவிரதம் ஒரு நாடகமென ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ள அதே வேளை விமல் வீரவன்ச ஒரு முட்டாள் என அதே கட்சியைச் சேர்ந்த மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். மகிந்த அரசின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் விமல் வீரவன்ச சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தின் ஏகப்பிரதிநிதியாக முயற்சிக்கிறார் என்று இலங்கை அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.