விஷ வாய்வுக் கசிந்த பாக்ஸ்கான் ஆலை ஊழியர்கள் கைது.

பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது நோக்கியாவின் மொபைல்களுக்குத் தேவையான உதிர்ப்பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாக்ஸ்கான் ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷ வாய்வுக் கசிவு ஏற்பட்டது. இதை தமிழகத்தின் எந்த ஊடகங்களும் வெளிக் கொண்டு வராத நிலையில் வினவு இணையதளம் இந்த உண்மையை உலகிற்கு அம்பலப்படுத்தியது.அமபலபப்டுட்த்தியதோடு மட்டுமல்லாமல் மக்கள் கலை இலக்கியக் கழகம் மூலமாக தொழிலாளர் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டது. போலிக் கம்யூனிஸ்டுகள் மௌனமாக வேடிக்கை பார்க்க, திமுக, அதிமுக தொழிற்சங்கங்கள் பாக்ஸ்கானிடம் பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்க ம.க.இ.க வினர் தொழிலாளர்களுக்காக பிராச்சாரங்களை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பல நூறு தொழிலாளர்கள் தொழிற்சாலை நிர்வாகதிற்கு எதிராக போராடத் துவங்கியுளனர். கடந்த இரண்டு நாட்களாக பாக்ஸ்கான் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 215 பெண்கள் உள்பட 1000 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் மென்பொருள் தொழிற்பூங்காவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு மொபைல் போன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகிறது. 4,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.