வியாபாரப் பத்திரங்களில் கைச்சாத்திட இந்தியக் குழு இலங்கை வருகிறது

இந்திய உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதாகத் தெரியவருகின்றது திருகோணமலை சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வகையிலேயே இந்த இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேசிய அனல்சக்தி நிறுவனம் இந்த திட்டத்தின் பொருட்டு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.