விமல் வீரவன்சவின் உண்ணாவிரத நாடகம் முடிவிற்கு வந்தது

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த விமல் விரவன்சவின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விமல் வீரவன்சவைச் சந்தித்து நீரைப் பருகக் கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு செய்துவைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமல் வீரவன்ச அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.