விடுதலை செய்யக் கோரி தமிழ்ச் சிறைக் கைதி சாகும் உண்ணாவிரதம்.

வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு விஸ்வமடுவைச் சேர்ந்த கு.மகேந்திரன் தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கு.மகேந்திரன் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மனைவியும் பிள்ளைகளும் விஸ்வமடு குமாரசாமிபுரம் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உண்ணாவரதமிருந்து வரும் கு.மகேந்திரனின் நிலை மோசமடைந்து வருகின்றது எனவும் அதே வேளை அவரைப் பார்வையிட எவரும் வரவில்லை எனவும் தெரிவக்கப்படுகிறது. தான் இறந்தால் தனது உடலை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்குமாறு கடிதமொன்றையும் அவர் எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.