விடுதலைப் புலிகள் சிறீலங்கா ரெலிகொம் பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளனர்:லங்கா இரித

விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்;டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ;ணனின் மெக்சீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது. இந்த கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன.