விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ram LTTEஇராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல்களை ராம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி :  குளோபல்தமிழ்நியூஸ்