விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே முடிவுகளை எதிர்வு கூறும் பன் கீ மூன்

விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே அக்குழு இலங்கை  அரசிற்கு எதிராகச் செயற்படாது என்ற வகையில் பன் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார்.

நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென  தெரிவித்துள்ளார்.

கொங்கோ குடியரசின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர் காணலில் இலங்கை விவகாரம் பற்றி சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய சகல தரப்பினருக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இதனை ஓர் சந்தர்ப்பமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.