வவுனியா அரச அதிபரைத் திட்டிய டீ.ஆர்.பாலு.

வன்னி தடுப்பு முகாம்களைப் பார்வையிடச் சென்ற பாராளுமன்னறக் குழுவிடம் முகாம்களிலும், பல்கலைக் கழகத்திலும், அனைத்து மக்கள் தரப்பிலும் தடுத்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரை சுதந்திரமாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பு முகாம் மக்களில் அவலங்களைக் விற்றுப் பிழைப்பு நடத்தும் பல தமிழ் தன்னார்வ நிறுவனங்கள் தடுப்பு முகாம்களில் புறக்கணிக்கத் தக்க பகுதியினருக்குச் சிறிய உதவிகளைச் செய்வதன் ஊடாக அங்கு பிரச்சனை ஏதும் இல்லை என்ற வெளித் தோற்றத்தை மக்களின் உணர்வுகளுக்கு மாறாக வழங்கி வருகின்றன. மக்களின் விடுதலைக்கான கோரிக்கையை மறைத்து அரச சார்பிலான கருத்துக்களைவழங்கிவருபவரும், தமிழ் தன்னார்வக் குழுக்களுடன் ஒத்துழைப்பவரும் வவுனியா அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ். டீ.ஆர்.பாலுவிற்கும் இவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில் பாலு இவரைக் கடுமையாகத் திட்டியதாகத் தெரிய வருகிறது.