வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 40 தமிழ் அரசியல் கைதிகள், இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தம்மை விடுதலை செய்யவேண்டும் அல்லது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், எனக் கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

hungerstrikeஇதேவேளை, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது