வழக்கறிஞர்கள் சென்னையிலும் சாகும்வரை உண்ணாவிரதம்

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் கடந்த எட்டு நாடக்ளாக வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லையிலும் போராட்டம் வெடித்த நிலையில் கருணாநிதியின் மகனும் அரசியல் ரௌடியுமான மு.க அழகிரியின் ஆதர்வாளர்கள் ரௌடிகளின் துணையோடு போலீசைக் கொண்டு மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் திரள் போராட்டமாக உருவெடுத்துள்ள மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை நினைத்த மாதிரி அப்புறப்படுத்த முடியாமல் தவித்து விபரீதமாகிவிடும் என்று எச்சரிக்கபப்ட்டதால் கைவிட்டனர். எப்படியாகினும் வழக்கறிஞர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் கட்டளை. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பல வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரத்தைத் துவங்கியுள்ளனர். கீழமை நீதிமன்றங்கள் மட்டுமல்லாது சென்னை உயர்நீதிமன்றம் வரை இப்போராட்டம் பரவி புதிய வடிவெடுத்துள்ளதால் போலீஸ் அடக்குமுறையை நேரடியாக ஏவவும் கருணாநிதி தயங்கமாட்டர் என்றாலும் இதை மக்கள் திரள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

2 thoughts on “வழக்கறிஞர்கள் சென்னையிலும் சாகும்வரை உண்ணாவிரதம்”

  1. தமிழென்றால் சாகவும் சம்மதம்.தமிழ்னுக்குத் தமிழில் வழிப்டவும் தடை,தமிழ் வழக்கறீஜனுக்குத் தமிழில் வாதிடவும் தடை.தமிழகமே உன்னால் தமிழைத் தாங்க முடியாதா.

Comments are closed.