வழக்கறிஞர்கள் கைது சிறையிலும் உண்ணாவிரதம் : ஆதரிப்போம் தோழர்களை.

மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் ஐந்து பேரும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஏழு பேரையும் இரவு பத்து மணிக்கு உயர்நீதிமன்ற பதிவரிடம் ஒரு புகார்மனுவை வாங்கி கைது செய்திருக்கிறது கருணாநிதி அரசு. உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆளும்கட்சி ஆதரவாளர்கள், என எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழியை தமிழக நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்கப் போராடியவர்களை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. போராடிய தோழர்கள் இப்போது சிறையில் நவீன ராமனாக அவதாரம் எடுத்திருக்கும் கருணாநிதியோ தமிழர்களை கொன்று குவித்த ரத்தக் குவியலின் செம்மொழி விருந்துக்கு தயாராகி வருகிறார். போராடும் தோழர்கள் நமக்காக போராடுகிறார்கள். நமது மொழி உரிமைக்காக போராடுகிறார்கள். இப்போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்கிற வேலையை ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழார்வலர்களே, ஈழத் தமிழ் மக்களே, உங்களின் ஆதரவை தமிழக வழக்கறிஞர்களுக்குத் தெரிவியுங்கள்.