“வல்லுறவால் பாதிக்கப்பட்டவர், வல்லுறவு புரிந்த வரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்”:ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்.

வல்லுறவால் பாதிக்கப்பட்டவர், வல்லுறவு புரிந்த வரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனை கூறியதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஜனநாயக மாதர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்வ தேச மகளிர் தினத்தை யொட்டி நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் ‘வல் லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது’ என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியபோது, வல்லுறவுக்கு ஆளான பெண், வல்லுறவு புரிந்தவரை மணந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வல்லுற வால் பாதிக்கப்பட்டவர் களுக்கு போதுமான இழப் பீடு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கு வலுவான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தாமல், அவர் இவ்வாறு கூறி யுள்ளார்.

வல்லுறவு பற்றி புகார் தெரிவிப்பதும், பதிவு செய்யப்பட்ட புகார்களில் தண் டிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவும் கவலையளித்து வரும் சூழலில், அவ ருடைய பேச்சு தவறான அறிகுறிகளை ஏற்படுத்தும். வல்லுறவு கொண்டவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் தற் போதைய போக்குக்கு இது ஊக்கம் அளிக்கும். அதே போல் வல்லுறவு குற்றவாளி தப்பித்துக் கொள்ளும் வழியாக இம்முறை பயன்பட்டு வருகிறது. இதுபோன்ற திரு மணங்கள் குற்றச் செயலை சட்டப்பூர்வமாக நியாயப் படுத்துவதுடன் இயல்பான தாகவும் மாற்றி வருகின்றன. இதுபோன்ற வன்முறைகள் தொடரக் கூடும் என்பதால் வல்லுறவு குற்றவாளியை மணப்பது தீர்வாகாது.

வல்லுறவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்தும், அமிலவீச்சு போன்று மற்ற வன்முறைகள் குறித்தும், பிற நாடுகளில் உள்ளவை போன்று இங்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வு அளிப்பதை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வல்லுறவு புரிந்தோரை மண முடிப்பது என்ற உணர்வற்ற தீர்வுகளைப் பயன் படுத்தக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்க அறிக்கை கூறுகிறது.