வரியைக் குறைக்க முடியாது கருணாநிதியின் கபடியாட்டம்.

கடுமையான பெட்ரோல் சமையல் எரிவாயு விலை உயர்வால் மத்திய தர, ஏழைகள் கடும் திண்டாட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தியா எங்கிலும் மக்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விலைவாசி உயர்வை காங்கிரஸ் கூட்டணி மிகவும் திமிருடன் எதிர்கொண்டு வருகிறது. கனடாவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன். “விலையைக் குறைக்க முடியாது இன்னும் கூட விலையேறலாம்” என்று திமிராக பதிலளித்தார். இந்நிலையில் மாநில அரசுகள்தான் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் விலைவாசியை குறைக்க வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த் போதே கருணாநிதி பேருந்து கட்டணங்காள் உயராது என்று அறிக்கை விட்டார். அதாவது விலைவாசியை குறையுங்கள் என்றால் பேருந்து கட்டணம் உயராது என்கிறார். ஆனால் ஏற்கனவே பேருந்து கட்டணங்கள் ஏழை மக்கள் பயணிப்பதற்கு இயலாத வகையில் உயர்த்தபப்ட்டுள்ளது. எம் சர்வீஸ், இடைநில்லா பேருந்து, ஏசி. பேருந்து என அநியாயமான முறையில் பேருந்து கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் மேலும் பேருந்து கட்டணங்கள் உயராது என்றார் கருணாநிதி. வரியைக் குறையுங்கள் என்ற கோரிக்கை எழ இப்போது வழக்கமாக மற்ற மாநிலங்களில் எவ்வளவு வரி தமிழகத்தில் எவ்வளவு வரி என்று புள்ளிவிபரங்களுக்குள் புகுந்து கபடி ஆடுகிறார். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி எல்லாவற்றிர்கும் நாடக்மாய் ஆடிக் கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை. ​ ​ இது​கு​றித்து,​​ புதன்​கி​ழமை அவர் வெளி​யிட்ட கேள்வி-​பதில் அறிக்கை:​ ஆந்​தி​ரத்​தில் பெட்​ரோ​லி​யப் பொருள்​க​ளின் மீது மாநில அர​சால் விதிக்​கப்​ப​டும் வரிவிகி​தத்​தைக் குறைக்​கப் போவ​தாக அந்த மாநில அரசு இன்​னும் அறி​விக்​க​வில்லை.​ அது​பற்றி அமைச்​ச​ர​வை​யில் விவா​தித்து முடி​வெ​டுக்​கப் போவ​தாக ஆந்​திர முதல்​வர் அறி​வித்​துள்​ளார்.​ ஆந்​தி​ரம் இப்​போது யோசித்​துக் கொண்​டி​ருக்​கும் முடிவை தமி​ழக அரசு,​​ ​ 2006-ம் ஆண்​டி​லேயே செயல்​ப​டுத்​தி​யது.​ மத்​திய அரசு பெட்​ரோ​லி​யப் பொருள்​க​ளின் விலையை உயர்த்​திய போது,​​ தமி​ழ​கத்​தில் டீச​லின் மீதான விற்​பனை வரி 25 சத​வீ​தத்தி​லி​ருந்து 23.43 சத​வீ​த​மா​கக் குறைக்​கப்​பட்​டது.​ ​ அது​போ​லவே,​​ 2008-ம் ஆண்டு மத்​திய அரசு டீசல் விலையை உயர்த்​திய போது தமி​ழக அரசு 23.43 சத​வீ​தத்​தில் இருந்து 21.43 சத​வீ​த​மா​கக் குறைத்​துக் கொண்​டது.​ அப்​போது வேறு எந்த மாநி​லமும் தங்​கள் மாநி​லத்​துக்​குக் கிடைக்​கும் வரி​யைக் குறைத்​துக்கொள்​ள​வில்லை என்​ப​து​தான் உண்மை.​ ​ அது​மாத்​தி​ர​மல்ல;​ இப்​போது மாநி​லங்​க​ளுக்​குள்ள வரு​வாய் ஆதா​ரங்​கள் மிக​வும் குறை​வாக உள்ள நிலை​யில் இதை மேலும் மேலும் குறைத்​துக் கொண்டே சென்​றால் அது மாநில அர​சு​க​ளின் நிதி நிலை​மையை மிக​வும் பாதிக்​கும் என்​ப​தை​யும் கருத்​தில் கொள்ளவேண்​டி​யுள்​ளது.​ ​ ​ மாநில அர​சு​கள் தங்​கள் வரி​யைக் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மென்று சொல்​லும் போது -​ இப்​போது பெட்​ரோ​லிய விலை உயர்​வுக்​காக போராட்​டம் நடத்​தப் போகின்ற பாஜக,​​ இட​து​சா​ரி​கள் ஆளும் மாநி​லங்​க​ளிலே எந்த அள​வுக்கு அவர்​கள் தாங்​கள் வசூ​லிக்​கும் வரி​யைக் குறைத்​துக் கொண்​டார்​கள் என்​ப​தை​யும் எண்​ணிப் பார்க்க வேண்​டும்.​ ​ ​ ஆந்​தி​ரத்​தில் பெட்​ரோ​லுக்கு 33 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 22.25 சத​வீ​த​மும் அந்த மாநில அரசு வரி விதிக்​கி​றது.​ கர்​நா​ட​கத்​தில் பெட்​ரோ​லுக்கு நுழைவு வரி உட்​பட 30 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 23 சத​வீ​த​மும் உள்​ளது.​ கேர​ளத்​தில் செஸ் உட்​பட பெட்​ரோ​லுக்கு 30 சத​வீ​த​மும்,​​ டீச​லுக்கு 25.69 சத​வீ​த​மும் வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது.​ பஞ்​சா​பில் கூடு​தல் வரி​யோடு சேர்த்து பெட்​ரோ​லுக்கு 37.5 சத​வீ​தம் வரி விதிக்​கப்​ப​டு​கி​றது.​ ​ ​ ​ ​ டீச​லுக்கு மகா​ராஷ்​டி​ரத்​தில் 23 சத​வீ​த​மும்,​​ மத்​தியப் பிர​தே​சத்​தில் நுழைவு வரி​யோடு சேர்த்து 24 சத​வீ​த​மும்,​​ சத்​தீஸ்​கர் மாநி​லத்​தில் 25 சத​வீ​த​மும் அந்​தந்த மாநில அர​சு​க​ளால் வரி வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது.​ ​ ​ தமி​ழ​கத்​தில் பெட்​ரோ​லுக்கு 30 சத​வீ​தம் வரி​யும்,​​ டீச​லுக்கு 21.43 சத​வீ​தம் வரி​யும் இப்​போது உள்​ளது.​ எனவே,​​ இந்​தி​யா​வில் தமி​ழ​கத்​தி​லே​தான் அதிக வரி வசூ​லிக்​கப்​ப​டு​வ​தா​கச் சொல்​லப்​ப​டு​வது சரி​யான தக​வல் அல்ல என்​பது எல்​லோ​ருக்​கும்விளங்​கும் என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார். 

One thought on “வரியைக் குறைக்க முடியாது கருணாநிதியின் கபடியாட்டம்.”

  1. விலைவாசியைக் குறைப்பதற்கு முயற்சி மேற்கொள்வோம் என்று ஒருபக்கம் பேட்டி கொடுக்கிறார்கள், இன்னொருபக்கம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள், நடுத்தரமக்களைப் பற்றி யாருக்கு கவலையில்லை. உங்கள் கட்டுரை ஆள்பவர்களுக்கும் உறைக்கட்டும்

Comments are closed.