வரவு செலவுத் திட்டம் : பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா:

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 700 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருமானம் 870 பில்லியன் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 519 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொiயை நிரப்ப அரசாங்கம் 84 ஆயிரத்து, 901 கோடி, 40 லட்சத்து 28 ஆயிரம் ரூபாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து கடனா பெறவேண்டும். 98 கோடி 44 லட்சத்து 60 ஆயிரம் ரூபா அரசாங்கள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்ளுக்கு செலவிடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு செலவினமாக 177 பில்லியன் ருபா ஒதுக்கப்பட்ட உள்ளது. கடந்த வரவுசெலவு திட்டத்தில் 166 பில்லியன் ரூபா பாதுகாப்பு செலவினங்களுக்கா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை 11 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 50 வீதம் படையினர், காவற்துறையினர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ஊதிய கொடுப்பனவுகளுக்காக செலவிடப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது.