வன்னியில் உணவுப்பஞ்சம் : WHO

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் எரிபொருட்கள் என்பவற்றுக்கு வன்னியில் பெரும் தட்;டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு லட்சத்து பதினேழாயிரம் மக்கள் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர். தொடரும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கான நிரந்தர முகாம்களை அமைப்பதிலும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அது தெரிவித்துள்ளது