வன்னியின் அவலநிலை : கத்தோலிக்க திருச்சபை.

கத்தோலிக்க திருச்சபையின், வன்னித்துணை ஆணைக்குழுத் தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார், வன்னி மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்திரு பெனட் அடிகளார் ஆகியோர் வன்னிக்கிளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு ஒன்றில் வன்னியில் நிலவும் மனித பேரவலம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. வான் தாக்குதல், ஆட்லறி பீரங்கித் தாக்குதல் என்பவற்றால் வன்னிப் பிரதேசத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மக்களுக்குத் தேவையான அன்றாடத் தேவைகள் மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன. இலங்கை ஊடகங்களுக்கு போடப்பட்டுள்ள எழுதப்படாத தடை, தணிக்கையால் இங்கு நிகழும் பெரும் மனிதத் துன்பியல்கள் உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம் மக்களின் துயர்களைத் துடைக்க ஐக்கிய நாடுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த வன்னி அமைப்பு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது