வட, கிழக்கு நில அளவையாளர் பதிவிக்கு 95 சிங்களவர், 5 தமிழர்

வட, கிழக்கில் பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள நில அளவையாளர்களில் 95 பேர் சிங்களவராகவும் 5 பேர் தமிழராகவும் இருப்பது அநீதியானது எனத் தெரிவித்து வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலாநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கி கிழக்கில் மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழுகின்ற போதும் குறைந்த பட்ச விகிதாசார முறை கூடப் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தவிர, இலங்கை இந்திய அரசுகளிடம் யாசித்துப் பெற்றுக்கொள்ளலாம் என மக்களை நம்பக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம் எழுதுவதைத் தவிர வேறு எதனையும் மேற்கொள்வதில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.