வடக்குக் கிழக்கு பிரச்சனை கருத்தறியும் வாக்கெடுப்பு : ஹெல உறுமய:

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான தீர்வு ஒற்றையாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டுமா அல்லது சமஷடி அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இரண்டு வருடங்களாக இறுதி தீர்வுகுறித்து கலந்துரையாடிய போதும், இறுதி முடிவுக்கு வருவது கடினம் என்பதால், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.