வடக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக மக்களை ஏமாற்றும் அரசு : திமுனு ஆடிகல

தென்னிலங்கையில் கூறப்படுவதைப்போன்று வடக்கில் மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்சியாவும் இல்லை. தென்னிலங்கை ஊடகங்களும் அரசாங்கமும் மக்களை ஏமாற்றி போலியான சூழலில் வைத்திருக்வே விரும்புகின்றனவாம்.

இவ்வாறு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தலைவி திமுனு ஆடிகல தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளர்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது தெற்கில் உள்ள ஊடகங்களும் அரசாங்கமும் வடக்கில் மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் உள்ளதாக கூறுகின்றன. ஆனால் நாங்கள் பல இடங்களிற்குச் சென்று பார்த்து திரும்பியுள்ளோம்.

உன்மையில் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடவோ பேசவோ முடியாதவர்களாக மட்டும் தான் மக்கள் உள்ளனர். பார்க்கின்ற பேசுகின்ற இடங்களெல்லாம் கணவனை இழந்த பெண்களும் பிள்ளைகளைப்பறி கொடுத்த கும்பங்களுமாகத்தான் இருக்கின்றன.

மேலும் காணாமல் போனவர்களின் குடும்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இவை பற்றியெல்லாம் தெற்கில் அரசாங்கமும் சரி ஊடகங்களும் சரி பேசுதே கிடையாது. குறிப்பாக சிங்கள மக்களிடம்.

எனவே இது தொடர்பாக தென்னிலங்கை சமுகத்திற்கு தெரியப்படுத்துவோம். நாங்கள் சென்று வந்த இடங்களிலெல்லாம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவேயிருக்கின்றனர். ஆனால் இவர்கள் விடயத்தில் அரசாங்கம் கருசனை கொள்வதென்பதே கிடையாது.

இன்னமும் நிவாரணத்தை நம்பித்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாவேயிருக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் பார்க்கப்படுகின்ற பாhவையில் மாற்றம் வேண்டும்.

காணமால் போனவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும.; அரசாங்கம் கூறுகின்ற தரவுகளை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை. உன்மையில் அரசாங்கத்திடம் சரியான தரவுகள் கிடையாது. என்றார்.

இந்த சந்திப்பின் போது கலந்து கொண்ட தென்னிலங்கை பெண்னொருவர் 2007ம் ஆண்டு தன்னுடை 17 வயது மகனை சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் அழைத்துச் சென்றனராம் ஆனால் இன்று வரைக்கும் பிள்ளையை காணவில்லை எனக்குறி கதறியழுதார்.

One thought on “வடக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக மக்களை ஏமாற்றும் அரசு : திமுனு ஆடிகல”

  1. விசுவாசிகள் சிறீய உதவி செய்கிறார்கள்.அண்ணன் ராஜபக்ஸ கந்த தஸ்டி அனுட்டிப்பதாக கதை விடுகிறார்கள்.மாயாவிகள் மனதை மூடி வைத்திருக்கிறார்கள்.உமா மகேஸ்வரனோ அன்னை உமை அம்மையோடு எல்லாவற்றயும் பார்த்துச் சிரிக்கிறார்.அறத்தை நம்பும் நாம் தர்ம வழியில் நின்றூ சிந்திப்போம்.

Comments are closed.