வங்கதேசத்தில் மீண்டும் மதச்சார்பற்ற கல்வி : சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த   தீர்ப்பின்அடிப்படையில், நாட்டில் மதச்சார்பற்ற கல்வி நடைமுறைக்கு வரும் என்று சட்டஅமைச்சர் சபீக் அகமது கூறினார்.

மதத்துடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்று வங்கதேச உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1972ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டம் தேசியம், சோசலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய நான்கையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டிருந்தது. ஆனால், 1979ல் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது அரசியல் சட்ட திருத்தம் ராணுவ அரசுகளை சட்டபூர்வமாக்கிய துடன், மதக் கல்வியையும் நியாயப்படுத்தியது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மதத்தைக் காயப் படுத்தவில்லை. மாறாக எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் அவ தூறுப் பிரச்சாரங்களையும் மீறி மதத்தை நிலைநிறுத்தி யுள்ளது என்று ஆசிரியர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவாமி லீக் தலைமையிலான கூட்டணி அரசு வரவேற்றுள்ளது. தீர்ப்பின் முழு விபரத்தையும் ஆராய்ந்த பின்னரே கருத்துகூற முடி யும் என்று வங்கதேச தேசி யவாதக் கட்சி தெரிவித்துள் ளது. இஸ்லாமிய அரசிய லைத் தடைசெய்யும் சதியின் ஓர் அங்கம் என்று ஜமாத் – இ- இஸ்லாமி கட்சி கூறியுள்ளது.

One thought on “வங்கதேசத்தில் மீண்டும் மதச்சார்பற்ற கல்வி : சட்ட அமைச்சர் தகவல்”

  1. பாகிஸ்தானிடம் இருந்து 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது.

    அதிலிருந்து இங்கு பல்வேறு குற்றங்களுக்காக 1000 பேருக்கு மேல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 411 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 5 பேர் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஐவரும் பங்களாதேஷுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த ஷேக்முஜிபுர் ரஹ்மானை கொலை செய்தவர்கள்.

    இவர்கள் தவிர, 36 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தூக்கிலிடப்படவில்லை. வேறுவிதங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இந்தத் தகவலை பங்களாதேஷ் சிறைத்துறையின் தலைமை துணை அதிகாரி கோலம் ஹைதர் தெரிவித்துள்ளார்

Comments are closed.