வங்கதேசத்தில் போர்க்குற்ற நீதிமன்றம்!

    
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை வங்கதேச அரசு உருவாக்கியுள்ளது.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட சுதந்திரப் போரின்போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன.

இவற்றைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிப்பதற்காகவென்று விசேட போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்றை வங்கதேச அரசாங்கம் அமைத்துள்ளது.

வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.12 பேர் அடங்கிய வழக்கறிஞர் குழு இந்த வழக்குகளை நடத்தும்.

1971ஆம் ஆண்டில் 9 மாதங்களாக நடந்த இந்த விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் உள்ளூர் உளவாளிகள் உதவியோடு சுமார் 30 லட்சம் பேரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 thoughts on “வங்கதேசத்தில் போர்க்குற்ற நீதிமன்றம்!”

  1. 39 வருடங்கள் கழித்துநடக்கும் விசாரணைகள் விடுதைல்யின் பேரால் கொன்று குவிக்கப்பட்ட உண்மையான தேசிய விடுதலைச் சக்திகளின் கொலைகளை பற்றி என்ன செய்யும்?

  2. வங்கதேசமும் வங்காளீகலும் தங்கலுக்கு இந்தியா செய்த வரலாற்றூ நன்மையை மறந்து இஸ்லாமிய மதவாதப் போக்கில் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு துண போகிறார்கள்.

    1. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையுமே தவறக விளங்கிக் கொள்ளும் உங்கள் பேராற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது.
      அதை உஙளுக்கு வழங்கிய ஆசான்கள் யாராயிருக்கும் என யோசிக்கிறேன்.

Comments are closed.