லைக்கா தமிழ் நாட்டில் இல்லை: பச்சைத் தமிழன் சீமானின் பச்சைப் பொய்

vijay_seemanகத்தி படம் தொடர்பாக நமது மறத்தமிழன் சீமான் மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் தமிழகத்தில் இல்லை என்றும் லண்டனில் எதிர்ப்பைக் காட்டுங்கள் என்றிருக்கிறார். 2009 ஆண்டிலிருந்து சீமான் நடத்த ஆரம்பித்த சந்தர்ப்பவாத அரசியல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற மிகப்பெரும் பொய்யை தமிழர்களுக்குக் கூறுவதிலிருந்து தொடங்கியது.

திரைப்பட இயக்குனராகத் தனது தொழிலை ஆரம்பித்த சீமான் சந்தர்ப்பவாத அரசியலை இயக்க ஆரம்பித்த போதே புலம்பெயர் பிழைப்புவாதிகள் கோரஸ் போட ஆரம்பித்தனர். இன்று லைக்கா/கத்தி விவகாரம் சீமானை நம்பியிருந்த அப்பாவிகளுக்கும் அவரை நிர்வாணமாகக் காட்டியுள்ளது. லைக்கா தமிழ் நாட்டில் இல்லை என்று பச்சைத் தமிழன் கூறிய பச்சைப் பொய்க்கான ஆதரம் இதோ:

லைக்காவின் இந்திய அலுவலகம் தமிழ் நாட்டிலேயே உள்ளது. அதன் முகவரி இதோ:

New No.5 (Old No.2),
9th Avenue, Ashok Nagar,
Chennai – 600 083
லைக்காவின் இந்திய இணையத்தள முகவரி இதோ:
http://lycatelecom.in/

லைக்காவின் துணை நிறுவனமான லைக்கா பிளையின் பதிவு இலக்கம் மற்றும் முகவரி விபரங்கள் இதோ:

Company Name Lyca Fly Private Limited
CIN U63040TN2007PTC065877
Registration Date 31-12-2007
லைக்கா ஹொட்டேல் என்ற மற்றைய நிறுவனத்தின் பதிவு இலக்கம் இதோ:
Company Name: LYCA HOTELS PRIVATE LIMITED
Cin : U55101TN2006PTC061776
Registration Date : 19/12/2006

இது தவிர கத்தி படத்தைத் தயாரிக்கும் லைக்கா புரடக்ஷன் நிறுவனத்தின் பதிவு மற்றும் தொடர்புகள் இதோ:

Company Name Lyca Productions Private Limited
CIN U92120TN2007PTC062756
Registration Date 16-03-2007

தமிழகத்தில் பிலின்ரொன் குளோபல் ரெக் பார்ட்னேர்ஸ் என்ற நிறுவனத்துடன் லைக்கா ஒப்பந்த செய்துகொண்டதற்கான ஆதாரம் இதோ:

http://www.thehindu.com/todays-paper/tp-business/plintron-global-tech-partners-lycamobile/article2427879.ece

இவை எல்லாம் பச்சைதமிழன் சீமானுக்குத் தெரியாமல் பால்குடித் தமிழனாக மாறிவிட்டாரோ?

சரி அப்படியே சீமான் இதெல்லாம் தெரியாத அப்பாவி என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் ராஜபக்ச தமிழகத்தில் இல்லை இலங்கையில் நீங்கள் போராட்டத்தை நடத்துங்கள் என்று லைக்காவிற்குச் சொன்னது போல சீமான் சொல்வாரோ என தொண்டர்கள் அச்சமடைவது நியாயமா இல்லையா?
சீமானின் முழு அறிக்கை இதோ:

‘கத்தி’ படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது குறித்து சீமான் கருத்து வெளியிட்ட போது, “‘கத்தி’ படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல.
தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வெளியான மெட்ராஸ் கபே, இனம் உள்ளிட்ட படங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி எப்படிப் போராடியது என்பது எல்லோருக்குமே தெரியும். ‘கத்தி’ படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை படம் வெளியான பிறகுதான் அறிய முடியும். படத்தின் கதாநாயகனான தம்பி விஜய்யும் இயக்குநரான தம்பி முருகதாசும் நம்முடைய சொந்தத் தமிழ்ப் பிள்ளைகள்.
படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றி ஏதேதோ சொல்லி, ‘கத்தி’ படத்தை சீமான் எதற்கு எதிர்க்கவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம். என்னை விரல் நீட்டிக் கேட்பவர்கள் எதற்காக எனக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டியதுதானே.
எல்லோரும் உசுப்பிவிட்டு ரசிப்பதற்கு நான் என்ன கோயில் காளையா..? ஈழ அழிப்புப் போர் தீவிரமானபோது இலங்கை அரசுக்கான தகவல் தொடர்பு உதவிகளைப் பெரிய அளவில் ஏர்டெல் நிறுவனம் செய்தது. அதனைக் கண்டித்து அந்த நிறுவன சிம்கார்டுகளை நாங்கள் உடைத்தெரிந்தோம்.
ஆனால், அந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தமிழகத் தொலைக்காட்சிகளும் இதர ஊடகங்களும் எத்தனை நிகழ்ச்சிகளில் ஏர்டெல் நிறுவனத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இதைக் கண்டிக்க இணையதளப் புரட்சியாளர்கள் எவருக்கும் துணிவில்லையா?
என்னுடைய அடுத்த படத்தை லைக்கா மொபைல் தயாரிக்க இருப்பதாக செய்தி கிளப்பும் இணையதளப் புரட்சியாளர்கள் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்துவிடலாம். கற்பனைகளுக்கு என்று ஒரு அளவில்லையா? அடுத்த படத்துக்கு வாய்ப்பு கேட்டுத் துண்டு போட்டு வைக்கும் வழக்கம் திரைப்படத்துறைக்கு நான் அறிமுகமான காலத்திலேயே என்னிடத்தில் இருந்தது கிடையாது.
இப்போதும் இரண்டு வருடங்களாக அண்ணன் கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம். எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம்.
‘சீமான் எதற்கு ’கத்தி’ படத்தை எதிர்க்கவில்லை?’ என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

34 thoughts on “லைக்கா தமிழ் நாட்டில் இல்லை: பச்சைத் தமிழன் சீமானின் பச்சைப் பொய்”

 1. ##  என்னுடைய அடுத்த படத்தை லைக்கா மொபைல் தயாரிக்க இருப்பதாக செய்தி கிளப்பும் இணையதளப் புரட்சியாளர்கள் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்துவிடலாம் ## சீமான்

  சீமான் குறிப்பிட்ட   அந்த இணையதளப்புரட்சியாளர்களில்  இனி ஒருவும் இருக்கிறதே ?

  இனி ஒரு மன்னிப்பு கேட் குமா ? அல்லது சீமானின் அறிவுரையை ஏற்று  சினிமாவுக்கு  கதை திரைக்கதை எழுதப்போய்விடுமா ?

  1. சீமான்,வைகோ,நெடுமாறன்  ஆகியோர்  30 வருடமாக தயாரித்து
   வெளியிடப்பட்டது தானே  தமிழீழப்போராட்டம்.  அதன் முடிவுதான்
   முள்ளிவாய்கால்  என்று அவர்கள்  இன்னமும்  சொல்லவில்லையே.

 2. இலங்கைத்தமிழா்களில் பெரும்பான்மையானவா்கள் சினிமாப்பைத்தியங்களாக வெளிநாடுகளில்கூட இருக்கும் வரை இந்த கோமாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.
  I  prefer to ignore these clowns. 

  1. Anyone ready to ignore these Indian cinema…?
    I mean…
   – by avoiding see these movies…
   – by avoiding call them here…

   I heard when Vijay TV Gopinath was here in Scarborough, Canada he asked $500.00 for. photo shot.

   Long time before, one time when Vijay was here in a Snow-winter time our youngsters including teenage to married girls lined up to take photos with him. That time they charged I think $25.00 for a photo shot…

 3. இவங்கட தில்லுமுள்ளை விட சுபாசே படம் எடுத்து நடித்தும் இருக்கல்லாம் இந்த சீமான் கோபாலசாமி நெடுமாறன் விஜகாந் திருமாவழவன் சரத்த்குமார் நடிகர் சங்கம் பெப்சி அத்தனையும் காசுக்கு அழையும் எச்சில் …………ய்கள் என்பது ஈழத்தமிழராகிய குறிப்பிட்ட தமிழர் அன்றில் இருந்தே இவர்கள் தில்லுமுல்லூகளை பார்த்தவர்கள்.ஆகையாள் லைக்காவும் லிபறவும் இவர்களுக்கு போடும் பிஸ்கேட்டை அழந்து போடுங்கள் இல்லையேல் அழித்து விடுவார்கள் .என்னை பொறுத்தமட்டில் இந்த இரண்டு நிறுவனங்களும் இவர்களிடம் இருந்து ஒதிங்கிவாழூங்கல் இல்லையேல் உங்கள் பணத்துக்கு ஆப்புத்தான்

  1. உங்கள் அறியாமையை என்னவென்பது ? 

   ஏதோ இந்த இரண்டுநிறுவனக்களும்  ஈழத்தமிழர்களிடையே மட்டும்தான்  வியாபாரம் செய்து வருவது போல் இந்த இணையதளமும் , இதில் பின்னூட்டமிடுபவர்களும் தெரிவித்து  வருவது நகைப்புக்கிடமானது .

   இது பலநாடுகளிலும் வளர்ச்சி அடைந்த ஒரு பன்னாட்டு கமப்னி என்பது கூடவா தெரியாது  பின்னூட்டமிடுகிறீர்கள் ..

   1. அறியாமையைப்ப்ர்ரி பேசும் லாலா என்பவரிற்கு    இந்த  சர்வதேச
    நிறுவனங்களின்   ஆணிவேர்கழும்  ஆரம்பமும் எங்கு  என்று தெரியுமா?
    ஜேர்மனியிலும், சுவிசிலும்  பாங்குகளில்    பணத்தை  சுருட்டிக்கொண்டு
    லண்டனிலும்,கனடாவிலும்  முதலாளிகளாக  வாழும் தமிழர்கள்
    சிலரையும்   அவர்கள்  மற்ர  தமிழர்களை விடவும்  புத்திசாலிகள்
    எனவும் போற்றுவோமா?

    1. இதை பல முறை சொல்லி விட்டீர் . எதற்காவது ஆதாரம் இருக்கிறதா எனக்கேட்டால் அதற்கு பதில் சொல்லாது  வேறு ஏதாவது பசப்ப ஆரம்பித்து விடுவீர் .

     1. மைகோல்,ஜொல். என இரு புதிய
      தொலைபேசிநிறுவனங்கழுமுள்ளன.
      இதனைப்பற்ரி  ஆவது  அறிந்திருக்கின்றீர்களா?

      இப்போ  உள்ள  நிறுவங்களின்  பெயர்கள்
      போய்  இனி இவைகள்தான்  வரப்போகின்றன.
      இந்திய முதலாளிகள்  சர்வதேச  வர்த்தக்த்தில்
      அகதிகளாக வராமல்  ஈடுபடுகின்றார்கள்

      இலங்கைத்தமிழ் அகதிகளாக வந்தோரோ
      உலகினையே  விலைபேசுகின்றார்கள்.
      இவர்களைப் புகழவென்றே   ஒரு கூட்டம்
      உள்ளது.

     2. “இலங்கைத்தமிழ் அகதிகளாக வந்தோரோ
      உலகினையே விலைபேசுகின்றார்கள்.
      இவர்களைப் புகழவென்றே ஒரு கூட்டம்
      உள்ளது.”, உன்னால முடியல்லின்ன்னா வ்யிதெரிச்சலா.

    2. If you are accusing them of financial fraud you have to prove it with evidence. It is cowardice to make such accusation as an anonymous person. When you don’t have the balls to reveal you identity while accusing others without proof you are the criminal here. If you will come out you know that people will expose your frauds with evidence.

     1. என்ன எப்போது  எப்படி நடக்க வேண்டுமோ
      அப்படியே  நடக்கும்.  ஏழைகளின் பிள்ளைகள்
      ஆயுதமேந்தி பலியாக  அவர்களை புலிகளாக்கி
      அவர்களே  புலிகள்  அழிந்துவிட்டார்களென
      உலகிற்கு காட்டிவிட்டு   புலம்பெயர்நாடுகளில்
      உல்லாச  வாழ்வு வாழும் புலிவேசம்
      போட்டு  வாழ்ந்த  துரோகிகளை உலகம்
      கண்டு கொள்ழும் கால்ம் வெகு தூரத்தில் இல்லை.

     2. When you are cornered you start acting like you are insane. Probabaly you are truly insane and you need help. You cannot get it here. Please go and visit a shrink.

    3. We know people from from Europe, first they claim asylum there & then claim asylum here in Canada with false documents…
     Ok, can you name few of them, who were did fraud like credit card & bank loan & invest here…?

     1. Did you claim your asylum in Canada with genuine documents? Most likely not, then why are you blaming the others.

     2. Mr. Sutharshan,
      Mind ur words here.
      I’m a genuine refugee, claimed my asylum with genuine papers & genuine asylum.
      I’m not a economical refugee.

      But, I don’t have to proof all here.
      More than all from 1982 I’m in same stand.

      I never talk about LTTE only after 2009. 
      My views… critisam… always open.

     3. The one who has to mind his words is you, you make all sorts of allegations against others without evidence. According to you others are fake refugees but not you. If your case was so genuine why can’t you make it public for others to see. 

     4. Mr. Sutharshan,
      Read my previous comment again…
      I said that, ” But, I don’t have to proof all here”

      Without evidence I never say anything. 
      And what ever  I say all happened lately.

      Here, I don’t have to make my case for public.
      But, if you want I’m ready to meet under Canadian immigration.
      Bring your papers & I’ll bring mine. And the refugee board/ immigration must have our papers.

      Here most of the LTTE supporters who ever fund them, in their  refugee case the say that, they were affected by LTTE  & thr Govt.

      And some of others first they go to Europe get asylum & get papers. 
      Then come here & claiming as they are coming from Srilanka…

      More than all… for these people, some time their children born in Europe & here they submit Srilankan birth certificate for them.

      But not all of them… There also genuine refugees.

      If I said, anything wrong. 
      Mr. Sutharshan, here ask the immigration lawyer Dr. Sri. S. Sriskanda.

      Mr. Sutharshan, I’m ready to debate this under the supervision of Canadian authorities…
      I’m open here, only for the law & order; not for the selfish stupids…

      From 1982 what ever I said, it happened… happening… 
      Also, in my refugee papers I said few things…
      If you want make an appointment with the Canadian refugee board/ immigration , I’m ready!
      They must have all our our documents…!

      Are you ready…?

     5. I am not planning to have a spat with you on this here. I am not the one who said that others aren’t genuine but you are. If you are genuine there is no need to go to the Canadian Government for a meeting we all can meet here in this forum. You will have a copy of all your documents or you can get one from the attorney who represented you. You will have no shame or fear of disclosing your material. As for me I do not belong to that category, I get to work based on my skills and I can get back to SL anytime I want. And above all that I am not the one who started accusing others of foul play while claiming my case is unique and genuine.

     6. Man, everyone need to work and earn money to bring food to the table. If only everyone is to live off the govt hand out who will do the work and pay taxes for the handout you get ?

 4. புனிதப்பயணம் முடிவடைவதில்லை… விஜய்

 5. மன்னன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை, ஆதாரம் காட்டும்படி கேட்பது கொஞ்சம் அதிகம்.  கனடாவில் தமிழா்கள் Bankruptcy அடித்து பணம் சுருட்டுவது சில வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக நடந்த ஒன்று.

  1. For this there are bankruptcy agents in our community… We can see their ads in newspapers & TV…
   Also they’ll advice you, how to take loans… fill up credit cards…  & I heard there is a system load up in the credit card & get the money…
   At the end they’ll arrange for your bankruptcy with a good commission…

   Individuals &!businees people doing this… (Business people after claim bankruptcy… Get good lum sum… Then change the name of the business with may be a letter different & change the ownership, run the business…

   I don’t like to name them here…

 6. இங்கு சாட்சியங்கழுடன் விடயங்களை  கொண்டுவந்து  சட்ட  நடவடிக்கை
  எடுப்பது என்பதல்ல  நோக்கம்.  ஒவ்வொருவாரும்   தங்கள் சுற்ராடலை
  அவதானிக்க வேண்டும்.   சர்வதேச   தமிழர்    நிறுவனங்கள்   தனி  ஒரு  நபரின் திறமையினால்  இவ்வாறு  வழரவில்லை.  அதன் பின்னணியில் யார் யாரெந்த  நாட்டில்  எப்படியெல்லாம்   கடந்த   30  வருடமாக  செயற்பட்டார்களென்பது  மர்மம்.     

  இதில்  உற்ரார்  உறவினர்கள்  கூட   சம்பந்தப்பட்டிருக்கலாம். பணம்
  என்றால்  பிணமும் வாயை  ஆவெண்ணுமென்பார்களே அதேபோல்தான்.
  இங்கு  விவாதிப்பதின்   அர்த்தம்  இவ்வாறான  தமிழரின்  சர்வதேச
  நிறுவனங்களின்    செயற்பாடுகளே  அவர்களின்  பின்னணிகளையும்
  அதனால்  அவர்கள்   தமிழர்களின்  நலஙளிற்காகவா  அல்லது    தமிழினத்தை   அழிப்பவர்களின்    நலன் களிற்காகவா  செயற்படுகின்றார்களென்பதை      வெளிக்கொண்டுவருவதேயாகும்.

  1. முதல்ல உங்களது இரண்டுங்கெட்டான் செயற்பாடுகள்  யாரது நலன் களிற்காக  என்பதே பெரிய மர்மமா இருக்குது ?

   அதைத்தான் கண்டு பிடிக்கணும்  முதல்ல 

 7. இங்கு சில பேரின் பதிவுகளை பார்த்தால் ஜோஸ்யக்காரன் தோத்தான் போங்கள் .

   “நான் சொன்னதெல்லாம் அப்படியே பலித்திருக்கிறது , பலித்துக்கொண்டிருக்கிறது ”

  அக்கப்போர் தாங்க முடியவில்லை ..

  1. புலிகளின்  போராட்டத்தை விமர்சித்தவர்கள்,தவறுகளை  சுட்டிகாட்டியவர்கள்
   எல்லாம்  துரோகிகள் என்னும்  தீர்ப்பின் கீழ்  தீர்த்துக்கட்டப்படார்கள்.
   அவர்கள்  முன் கூட்டியே  முள்ளிவாய்க்கால்  நிலமையை   ஓரளவாவது
   ஊகித்திருந்தார்கள். இப்போதும் கூட  இதுபற்ரி  லாலா  என்பவரால்
   சிந்திக்கவோ அல்லது   ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

   1.   விமர்சிப்பது , வயிற்றெரிச்சலில் தூற்றுவது  என்பது வேறு ,  எதிர்காலத்தில்நடப்பவற்றை ஆய்ந்தறிந்து  தெரிவிப்பதென்பது வேறு .

    மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்களினதும் ,  இனவெறி அரசோடு  கூட்டு சேர்ந்து  போராட்டத்தை பழித்தவர்களும் , பழி தீர்த்தவர்களும் , தம்மை ஏதோ  ஜோஸ்யக்கர்ரர்கள் ரேஞுஞுக்கு  அளந்து விடுவதை பற்றி என்ன சொல்ல ?
     இவர்களை ஜோஸ்யக்கரர்கள் என்று அழைப்பது கூட பொருத்தமில்லை .
    வேண்டுமானால்  கோடங்கி , உடுக்கடிப்பவர்கள் வரிசையில் சேர்க்கலாம்.

    1. கருணாவும், பிள்ளைய்யனும் அரசுடன் சேர்ந்தால்
     அவ்ர்கள் துரோகிகள். புலம்பெயர்நாட்டில்  தமிழர்களின்
     பண்த்தை சுருட்டுக்கோன்டுபோய்  இராசபக்சவின்
     அரசுடன்  கைகோர்த  புலி வேசம் போடிருந்தவ்ர்களை
     கடந்த   30  வருடமாக  அறியாமல் ஆதரவ்ழித்த்வர்கள்,
     இப்போ  இலங்கையிலுள்ள  துரோகிகளைப்பற்ரி
     வரைவுலக்கணம்  சொல்கின்றார்கள்.

     1. கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது காட்டி கொடுத்த மாற்று இயக்கத்தினரை களை எடுத்தபோது சகோதர படுகொலை செய்த துரோகிகள் என ஒப்பாரி வைத்தவர்களுக்கு , அவர்கள் இலங்கை அரசுடன் இணைந்ததும் உலக மகா யோக்கியர்களாக  தெரிகிறார்கள் போலும் .

      இலங்கை அரசின்  உள்ளிருத்தி ஜால்ராக்கள் தான்நாங்கள்  என்பதை இவ்வளவு வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி .

 8. Here, I saw a photo from Facebook
  In this in ‘Lyca Mobile’ sponsored…
   “12th International Conference on Tamil Culture 40th Anniversary of IMTC” event ITAK – TNA Mavai & Co was there…
  ( October 4th& 5th,  Germany – Hamm)

  But here talking something like Lycamobile & Mahinda having deal…

  What is true here…?

Comments are closed.