லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இலங்கை இராணுவ விமானத்தில் சென்று இராணுவத்துடன் கைகுலுக்கும் லைக்கா
இலங்கை இராணுவ விமானத்தில் சென்று இராணுவத்துடன் கைகுலுக்கும் லைக்கா

குமுதம் இதழுக்கு லைக்கா மோபைலின் நிறுவனரும் இயக்குனருமான சுபாஸ்கரன் வழங்கிய நேர்காணலில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தவிர, இலங்கைக்குச் சென்ற சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத் தனியார் நிறுவனம் இலங்கை அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும் கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள்.

முதலில் இலங்கைக்குச் சென்ற லைக்கா உரிமையாளர் தனியார் நிறுவனத்தின் ஹெலிகொப்டரில் சென்றார் என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கும் முயற்சி. அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஹெலிகொப்டரில் இராணுவத்துடனேயே சென்றார்கள் என்பதற்கான புகைப்பட ஆதரங்கள் வெளியாகியுள்ளன.

மேலேயுள்ள படத்தில் லைக்கா நிறுவனத்தின் இயக்குனர் சுபாஸ் ஹெலிகொப்டரிலிருந்து இறங்கி நடந்து செல்வதையும், பின்னணியில் புலம்பெயர் நாடுகளில் தென்னிந்திய சினிமாக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் ‘கத்தி’ இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன் பிலிம்ஸ் கருணாகரமூர்த்தியையும், லைக்கா நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம் சிவச்சாமி இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியால் வரவேற்கப்படுவதையும் காணலாம்.

சுபாஸ்கரன் எதோ இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டை போனால் போகட்டும் என்று எட்டிப்பார்த்துவிட்டு வந்தார் என்ற தொனிப்பட   செய்திகளில் சொல்லப்படுகின்றது. உலகத்தின் மனிதாபிமானிகளும், ஜனநாயாகவாதிகளும், முற்போக்குசக்திகளும் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று குரலெழுப்பிக்கொண்டிருந்த வேளையில், லைக்கா நிறுவனமே மாநாடு நடப்பதற்கான ஒரு பகுதிச் செலவைப் பொறுப்பெடுத்துக்கொண்டது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களிடம் பெற்ற இலாபத்தை இலங்கையில் ராஜபக்சவைப் புனிதப்படுத்த முதலிட்ட லைக்கா அதிபர் தனக்கும் ராஜபக்சவிற்கும் தொடர்பில்லை என்று கூறுவது மக்களின் தலையில் மிளாகாய் அரைக்கும் முயற்சி.

இதற்கும் மேலாக ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து சுபாஸ்கரன் குழுவினர் போலி தொலைபேசி இன்டர்னெட் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் 100 மில்லியன் டொலர்கள் மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டிய செய்தி ஆதாரங்களுடன் சண்டேலீடர் மற்றும் இனியொரு சஞ்சிகைகளில் வெளியாகியது.

இனப்படுகொலை நடத்திய இலங்கை இராணுவத்தோடு கைகுலுக்கும் அதே முகங்கள் தமிழ் நாட்டில் ‘கத்தி’ சுத்துகின்றன. ஐங்கரன் வீடியோ நிறுவனத்தின் கருணாகரமூர்த்தியும், சுபாஸ்கரனும் அவர்களது இரத்தக்கறை படிந்த்த கரங்களோடு தென்னிந்திய சினிமா வியாபாரத்திலும் நுளைந்துள்ளார்கள்.
இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து கொள்ளையடித்துவிட்டு சமூக சேவை செய்வதாக நாடகமாடுகிறார்கள்.

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

16 thoughts on “லைக்கா : குருதிபடிந்த கரங்கள்”

 1. தமிழர்களில் பெரிய அளவில் வளர்ந்த தொழிலதிபர்கள் மிகக் குறைவு. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் லைக்கா மற்றும் லிபரா நிறுவனத்தினர். ஒரு தொழில் செய்வதென்றால் அரசின் அனுசரணை தேவை. மேற்குலக நாடுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஆளும் அரசியல் கட்சிக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கும் நிதி வழங்குகின்றன. இதைத்தான் லைக்கா மற்றும் லிபரா நிறுவனங்களும் செய்கின்றன. இராஜபக்சே ஆட்சியில் இருக்கிறார். அதற்காக தமிழர்கள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க முடியுமா? சம்பளம் வேண்டாம், அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி குருதி படிந்த நிதி அது வேண்டாம் என்று சொல்ல முடியுமா? இந்த நிறுவனங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ்மக்களுக்கு உதவி செய்கின்றன. லைக்கா நிறுவனம் 3000 மில்லியன் உரூபாயில் பல மேம்பாட்டுத்திட்டங்களை ஞானம் அறக்கட்டளை மூலம் செய்து வருகிறது. லிபரா தனது இலாபத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகத்தில் முகாம்களில் வாழும் ஈழ அகதிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க செலவழிக்கின்றது. வெளிநாட்டில் குசாலாக இருந்து கொண்டு குருதி படிந்த கைகள் என்று ஒப்பாரி வைக்கும் இனியொரு இணையதளம் அந்த மக்களுக்கு 10 டொலர் கொடுத்திருக்கிறதா? குற்றம் காண்பது எளிது. அரியவாம் நல்லது செய்வது. எழுதுவது எளிது. செய்வது கடினம்.

  1. Very well said. There is a term for this, it is called the tall poppy syndrome – slang for the tendancy to criticise highly successful people (ie, tall poppies), and ‘cut them down’.

  2. நீங்க யாருங்க? இரண்டு கம்பனிகளுக்கும் பிரச்சாரத்திற்கு அமா்த்தப்பட்டவரா ?
   நீங்கள் யாவரும் ஏன் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள மறுக்கின்றீா்கள் 
   தமிழ் மக்களுக்கு தேவை உங்கள் பிச்சையல்ல” உாிமை” அதை மறுக்கும் பாசிஸ்ட்களுடன் இணைந்து வியாபாரம் செய்வதுமட்டுமல்ல அந்த வியாபாரங்களின் மூலம் அவா்களை குற்றமற்றவா்களாக வெளி உலகிற்கு சாயம் பூச முற்படுவதும் அபிவருத்தி ஒன்றே தமிழருக்கு தேவை வேறு எதுவுமில்லை என்று பிதற்றும் கயவா்களுடன் இணைந்து அதை நியாயப்படுத்த முற்படுபவாகளுடக்கு யாரும் வக்காலத்து வாங்கவேண்டாம் தமிழா்களை சுதந்திரமாக விடுங்கள் அவா்கள் தமது உழைப்பிலேயே வாழ்வாா்கள் உங்கள் இரத்தம் தோய்ந்த பிச்சை தேவையில்லை.

   அதிா்வு என்கின்ற சில்லறை இணையத்தளமும் சுபாஸ்கரனின் நடிப்பை நம்பி செய்தி வெளியிட்டுள்ளது.

  3. லைக்கா,லெபரா என்பது  இரு  நிறுவனத்தின் பெயர்கள். அதன் அதிபர்களின்
   பெயர்கள் ஒருபுறம்.    இந்த்  இரு  நிறுவனங்களை  வளர்த்ததும், அதன்
   பின்னணியிலும்  புலம்பெயர்  நாடுகளில் எத்தனை  நிறுவங்கள்  ஆர்ம்பிக்கப்பட்டு  எத்தனை  கோடி  பணம் எத்தனை  பேர்களால்  மோசடி செய்ப்பட்டதென்பதும், இவர்களின் பின்னால்  உலகமெங்கும்  எத்தனை
   தலைமறைவான  தமிழ் முதலைகள் வாழ்கின்றார்களென்பதும்
   யாரறிவார்களோ?

 2. நீங்களே சொல்லி விட்டீர்கள் அரசின் ஆதரவு தேவை என்பதை. இனப்படுகொலை புரிந்த அரசின் ஆதரவுடன் சேவை செய்பவர்கள் எப்பேற்பட்ட எமகாதகர்களாக இருப்பார்கள்? வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மக்களை கொள்ளையடித்து எலும்புதுண்டுகளை வீசுவதற்கு  பெயர் சேவையா? தங்கள் உடல் உயிர் உழைப்பு அனைத்தையும் மக்களுகாக வழங்கிப் போனவர்களா லைக்கா லிபரா முதலாளிகளா சேவையாளர்கள்? வேளிநாட்டில் இனப்படுகொலை புரிந்தவர்களோடு கும்மாளமடிப்பவர்கள் இவர்களுக்கு ஒத்து பாடுபவர்குளே குசாலாக இருக்க முடியும். நம்ம சோற்றுக்கு நாமதான் உழைக்கிறோம். அப்படித்தான் இலங்கை மக்களும் வாழ நினைக்கிறோம்.

 3. என்பார்வையில் அசசியள் நிறுவனங்களின் தலைவர்களான .சீமான் கோபால சாமி.திருமவளவன்.நெடுமாறன்.இவர்களை விட லைக்கா நிறுவனம் மோசமா??? எப்படியாவது தமிழர்களுக்கு போகும் ஆரம்ப பணமான 3000 கோடியை தடுத்து நிறுத்தும் முயற்சியா??? லைக்கா..லிபரா..இலங்கைக்கு தேவை இல்லையேல் வெலிநாட்டு நிறுவனங்கள் சூழும் அபாயம் ஆபத்தானது .ஆகவே எமது தளத்தை அன்னியன் போட வேண்டுமா??? நாம் போட வேண்டுமா??? சிந்திப்பது தமிழரின் கடமை .இலங்கையர் கடமை

 4. நல்ல யோசனை. திருமா வை கோ போன்றவர்களுக்கு பதிலாக அல்லிராசாவும்  நாற்பது திருடர்களும் பரவாயில்லை என்கிறீர்கள். எத்தனை நாட்களுக்கு இவர்களால் பிச்சை போட முடியும்.இவர்கள் போடும் பிச்சை பணம் எங்கிருந்து வந்தது? ராஐபக்சவுடன் இணங்கி போனதால் வந்தது. ராஐபக்ச அரசுடன் உடன்படாமல் எந்த தொண்டு நிறுவனமும் இலங்கையில் இல்லை. லைக்காவிற்கும் லிபராவிற்கும் கோடி கோடியாய் மூலதனம் திரளவேண்டும். மக்களுக்கோ அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் குருதிக்கும் கணக்கு வேண்டும்.

  1. மேலே உள்ள படத்திற்கு சில ஆதாரங்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு சான்று http://www.youtube.com/watch?v=yyeehl8OTuw#t=317  …மன்னிக்கவும் மக்களுக்கும் தனிமனிதர் தொன்டு செய்வதும் தொன்டு நிறுவனங்கள் செய்வதும் குற்றம் என்று ஏதாவது சட்டம் உள்ளதா? ஜரோப்பாநாடுகளில் என்னில் அடங்கா தனியார் சோசல் செய்யும் நிறுவனங்கள் உண்டு .உதாரணம் ஜரோப்பாவில் சட்ட ரீதியாக மொழி பெயர்ப்பாலர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றட் போல் இதையே செய்து திருடுகிறார்கள்.ஒரு திருடன் ஊசி திருடினாலும் குற்றம் தான் .ஊரை திரிடினாலும் குற்றம் தான் .இதில் லைக்கா .லிபறா மட்டும் தாக்கப்படுவதன் அர்த்தம் என்ன?  .திட்டமிட்டு தமிழர்களுக்கு போகும் பணத்தை தடுக்கும் பணமில்லாத மா மேதைகளுக்கு என்ன லாபம் .லைக்கா .லிபறா .என்னை பொறுத்தமட்டில் அவர்கள் பாதையில் அவர்கள் போகின்றார்கள் அந்தந்த நாட்டு சட்டப்படி ….நமது ஆக்களுக்கு என்ன பிரச்சனை ??.வங்கி கொள்ளை இட்டவனும் .அண்னன் தம்பியை கொண்டவனும். இனங்களை வெளியேற்றியவனும்.தேவைப்பட்டால் அரசுடன் கும்மாலம் அடித்த‌தையும்.(இன்றும் நடக்கிறது) விடுதலை அமைப்புக்கள் என்று நினைத்து 38 வருடங்களுக்கு மேலாக நாசமறுந்து போனவர்கள் நாம் .என்னும் நாசமாக போகப்போகிறோமா???? அல்லது தற்போது சுதந்திரமாக சட்ட கோட்பாடுடன்  இயங்கும் தனிநபர்கள்  செயள் திட்டங்களை தடுக்க போகின்றீர்களா,,,, உங்கள் எழுது கோல் மக்களுக்கு நன்மை அழிக்க எனது வாழ்த்துக்கள் 

 5. ##  எத்தனை நாட்களுக்கு இவர்களால் பிச்சை போட முடியும்.##

   அதானே !  அந்த உதவியும்  கிடைக்கா விட்டால்தானே  மிகுதியாயிருக்கும் தமிழ்கர்களும் அழிந்து போவார்கள் .
  அதுதானே பேரினவாதிகளின் ஆசை .
  அதுதானே பேரினாவதிகளுக்கு சொம்பு தூக்குபவர்களது இரகசிய ஆசை .
  அதனால்தான் இப்படி மறைமுகமாக ஆதாரவான கருத்து சொல்வதுபோல் விஷ விதை  விதைக்கிறார்கள் .

 6. எப்ப வந்தவர்கள் இந்த பிச்சை போடும் திருடர்கள்.  என்னையும் உங்களையும் எந்தப பிச்சைகாரர்களின் பிச்சையில் எம்மை பெற்றவர்கள் சோறுபோட்டு வளர்த்தார்கள்? சொந்த உழைப்பில் சுயமாய் வாழாதவர்களா எமது மக்கள்?

  1. Again this is all empty rhetoric, a lot of our people have lived on welfare when they started their lives in the West. For you that is fine but the people in SL must not get such a welfare check ?

 7. தோண்டு செய்வது என்றால் சும்மா இருந்து நாங்கள் எறிகிற பிச்சை காசில் சுயமரியாதையை இழந்து மக்களே வாழுங்கள் என்பதா?

 8. இந்த இரண்டு  நிறுவனங்களும் தமிழா்களது என்று அறிந்த வேளை மகிழ்ச்சியாகவே இருந்தது. அவா்கள்மேல் பொறாமைப்படவோ விமா்சிக்கவோ யாரும் இருக்கவில்லை. அத்தோடு  எந்தவிதமான Syndrome மினாலும் யாரும் பாதிக்கப்படவும் இல்லை ஆனால் என்ன நடந்தது, கொடிய பாசிஸ் அரசுடன் கைகோா்த்து மக்களை சுரண்ட முற்படுவது மட்டுமல்லாது அவா்களை்(அரச அரக்கா்களை )காப்பாற்ற முயற்சிப்பதை புாிந்துகொண்டவா்கள் அவா்கள் பிச்சை போடுகிறாா்கள் ஆதலால் பேசாமல் விட்டுவிடுவோம் என்று இருந்துவிடச்சொல்கிறீா்களா
  இவா்கள் பணக்காரா்களாக வந்து பிச்சை போடுவாா்கள் என்று நம்பி தமிழ் சமூகம் போராட ஆரம்பிக்கவும் இல்லை இரத்தம் சிந்தவுமில்லை. நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு துன்பத்தில் வாடும் ஒரு இனத்திற்கு உதவி தேவை ஆனால் அதை பயன்படுத்தி யாரும் தவறான எண்ணத்துடன் அணுகுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

  தமக்கு துன்பம் செய்பவா்களை,ஏமாற்றுபவா்களை தம்மைவிட பலமானவா்களை நேசிக்க முயலும் உணா்வை Stockholm Syndrome  என்று அழைப்பாா்கள் அது யாருக்குண்டென்பதை உணா்ந்துகொள்க.

 9. கத்தி பாடல் வெளியீட்டுக்கு எதிராக போராட்டம்! வேல்முருகன்இ பூவைஜெகன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது

Comments are closed.