லைக்காவின் கத்தியின் நுனியில் கலையின் உயிர்கொல்லும் அனைத்துலக உயிரோடையின் நிகழ்ச்சி

lyca-flyலைக்கா நிறுவனம் மகிந்த  அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் வேறு காரணங்களுக்காகவும் அந்த ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுதுங்க்க கொலைசெய்யப்பட்டார். பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதிய போது அரச கூலிகளால் தாக்கப்பட்டார். இலங்கை வாழ் தமிழ் – சிங்கள மக்களின் வரிப்பணத்தைக் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா நிறுவனம் என்ற பல்தேசிய பெரு வியாபாரிகள் தென்னிந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்க்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் லைக்காவின் தயாரிப்பே. அப்போது லைக்கா ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் படத்தைத் தயாரித்திருந்தார்கள்.

இப்போது விஜய் நடித்த கத்தி படம் லைக்கா புரடக்ஷன் என்ற பெயரிலேயே தயாரிக்கப்படுகின்றது. இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் சட்டவிரோதப் பணத்தை வைத்திருக்கும் மாபியாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தல், வரிப்பணத்தை திருட்டு போன்ற இன்னோரன்ன வழிகளில் குவியும் பணத்தை படம் தயாரித்து இலாபமீட்டுகிறோம் என்று கணக்குக் காட்டுவதற்காகவே பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மில்லியன் கணக்கில் சட்டவிரோதப் பணம் புழங்கும் தொலைத்தொடர்பு வியாபாரிகளான லைக்கா சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை என 2012 ஆம் ஆண்டில் கார்டியன் நாழிதழ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்டது.
லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை. லைக்கா மூன்று வருடங்களாக கோப்ரட் வரியக் கட்டாமல் ரோரிக் கட்சிக்கு நன்கொடை வழங்கி வருகிறது என கார்டியன் நாழிதழ் தெரிவித்திருந்தது.. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்ட இதே நிறுவனம் கத்தி, கோடரி, அலவாங்கு என வரிசையில் சினிமா எடுத்து வரிப்பணத்தை கலை கலாச்சார வன்முறையாக மக்கள் மத்தியில் விதைக்கிறது.

இந்த நிலையில் லைக்காவிற்கு எதிரான போராட்டங்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகளால் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. கருத்தியல் தளத்திலும் செயற்பாடுகளாகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று, ஈழப் போராட்டம் போன்றே லைக்காவிற்கு எதிரான போராட்டமும் கூலிகளால் உள்வாங்கப்பட்டுள்ளது.

லைக்கா என்ற நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இதுபோன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் நுளைவாயிலாக அந்த நிறுவனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பல்தேசிய நிறுவனங்க்களையும் அம்பலப்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை மக்களதும் புலம்பெயர் மக்களதும் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தென்னித்தியத் திரைப்பட அழுக்குகளை புலம்பெயர் மக்களின் தலைகளில் கொட்டும் கலாச்சார வன்முறைக்கு எதிரான உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஈழத்தின் பாரம்பரியக் கலை கலாச்சரப் படைப்புக்களை வளர்த்தெடுக்க இதனைப் பயன்படுத்த எண்ணினர்.
இவ்வாறான மக்கள் சார்ந்த எழுச்சிகளை தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் லிபாரா போன்ற லைக்காவின் போட்டி அமைப்புக்கள் சார்ந்து செயற்பட ஆரம்பித்தனர்.

இக்கூலிகள் தென்னிந்தியாவிலும் கூலிப்படைகளை அமர்த்தி லைக்காவிற்கு எதிரான போராட்டத்தை வியாபாரப் போராட்டமாகத் திசைதிருப்ப முயன்றனர்.

தமது வயிற்றுப் பிழைப்பிற்காக நடத்தப்படும் இப்போராட்டங்கள் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே திசைதிருப்பியுள்ளது.

லைக்கா எதிர்ப்பை முன்வைத்து புலம் பெயர் ஈழத்து இளம் கலைஞர்களின் மத்தியில் உருவான கலை – கலாச்சார மறுமலர்ச்சியைச் சிதைக்கும் இப்போராட்ட வியாபாரிகள் எதிர்ப்பதற்கு லைக்காவைத் தவிர ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன.

ilcrarioஅப்பட்டமான பாலியல் வக்கிரங்கள் நிறைந்த பாடல்களைக் கூட பீலிங்கோடு பாடுங்கள் என்று குழந்தைகளிடம் கேட்கும் சுப்பர் சிங்கர் என்ற அருவருப்பு விஜய் ரிவி இன் நிகழ்ச்சிகளில் ஒன்று. ஈழத் தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத தேசியத்திற்கு எதிரான விதேசிய சக்திகள் சுப்பர் சிங்கரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருகின்றனர். அதுவும் தமிழ்த் தேசியத்த்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஐ.எல்.சி வானொலி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற தலையங்கத்தில் இயங்கும் இந்த வானொலியின் விளம்பரதாரர்களில் பிரதானமானவர்கள் லைக்கா. லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி விளம்பரம் இந்த வானொலியில் வந்து போகிறது.

சுப்பர் சிங்கரை நடத்தி வானொலி நடத்துவதற்கான நிதி சேர்க்கப் போகிறோம் என்கிறார்கள். அழுகிய கலைகளின் போதையூட்டி மக்களிடம் பணம் கறப்பதை நிதி சேகரிப்பு என்கிறார்கள். இதற்கும் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற வானோலி அனைத்துல உயிரெடுக்கும் தமிழ் என்பதை கலைப் போதை வியாபாரத்தின் ஊடாக நிறுவியுள்ளது.

தேசியம் என்றால் தேசியக் கலைகளை அல்லவா வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் இவர்களிடம் கேட்டுத் தொலைக்கக்கூடாது.

அரைகுறை ஆங்கிலத்தின் நடுவே இடைக்கிடை கொச்சைத் தமிழ்ப் பேசும் விஜய் தொலைக்காட்சி என்ற சாபக் கேடு புலம்பெயர் தமிழர்களது கலைகளையும் ஈழத்துக் கலைகளையும் மட்டும் அழிக்கவில்லை. தமிழக மக்களின் போரட்ட உணர்வையும் அழிப்பதற்குப் பயன்படும் அதிகாரவர்க்கத்தின் அழிகருவி.

கத்தியைத் தடை செய் என்று இஸ்லாமிய – கிரீஸ்தவ – இந்து மதவாதிகள் போல யாரும் கேட்டதில்லை.(தென்னிந்தியக் கூலிகளைத் தவிர) கத்தியைப் புறக்கணியுங்கள் ஜனநாயகவாதிகள் மக்களைக் கோரினார்கள். இதைப்போன்றே உயிரோடையின் கலைக்கொல்ல்லி நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் தேவை.

தென்னிந்திய கலைகளின் கலாச்சார வன்முறைக்கு எதிரான படைப்புக்களை அம்பலப்படுத்துவதும் கேள்வி கேட்பதும் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களில் அடிப்படையான ஒன்று.

கூலிப்படைகள் அப்போராட்டத்தை கோடம்பாக்கத்தில் குடியிருத்தி வைத்து வேடிக்கப்பார்க்கின்றன. தேசியக் கலைகளுக்கான அப்போராட்டத்தை கோடம்பாக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

2 thoughts on “லைக்காவின் கத்தியின் நுனியில் கலையின் உயிர்கொல்லும் அனைத்துலக உயிரோடையின் நிகழ்ச்சி”

 1. லைக்கா திட்டமிடப்பட்டு தமிழ் விடுதலைப் போராட்டத்தை அடிமட்டத்திலிருந்தே அழிக்கவும் வியாபார நோக்கங்க்ளுக்காக திசை திருப்பவும் முனைவதை விட்டு அல்லிராசா சுபாஸ்கரன் துணிந்து தானே தற்போதைய லைக்கா குழும தலைமை இயக்குனன் க்ரிஸ் டூலி, கிட்டடியில் விலகிய தலைமை தொழில்நுட்பவியலாளன் மிலின்ட் கங்லே ஆகியோருடன் அவர்களுக்கு எதிராக சண்டே லீடர் என்ற ஊடகத்தால் 2008 ஆம் ஆண்டிலிருந்து நம்பத்தகுந்த்த பெருங் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டதையொட்டியும் கிட்டடியில் காப்பரேட் வாட்ச் எனுமமைப்பு கொமன்வெல்த் மாநாடும் பல்தேசியநிறுவனங்களின் அநியாயங்களும் என்ற தலைப்பில் அதே குற்ற்ச்சாட்டுக்களை திரும்பவும் முன் வைக்க ஒடி ஒளித்ததாக மேலதிக குற்றச்சாட்டுக்களையும் எதிர் கொள்ள முன்வரவேண்டும்.

  அது அப்படியே நிற்க இப்பதிவிலுள்ளவாறு லைக்காவுக்கு அப்பால் ஏனைய பல்தேசியநிறுவனங்களின் மாபாதகச் செயல்களை நோக்கி முன்னோக்கிச் செயற்பட விடாமல் தொடர்ந்தும் தடைகள் வீசப்படுவதுவும் தவிர்க்கப் படனவேண்டியதொன்று. இத் தடைகளில் ஒன்று அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பிழையாக தம்பி விஜய் எதிர்ப்பு அது இது என்றுநிபந்தனைகளை விதிப்பது.

  சரி விஜய் டீ.வீ ஒரு குப்பத் தளமாக இருக்கலாம் அனால் அது ஒரு சிறு குப்பை மேடு.
  அவுஸ்திரேலியாவின் அதி உச்சநிறவெறியிலிருந்து மேலைத்தேய நிறவெறி ஆதிக்க மாயையின் சிகரமான ரூபேர்ட் மேர்டொக்கின் 21ஸ்ட் சென்ட்சரி பொfக்ஸ் என்ற மூலைச்சலவை காந்தமே பலாத்காரமாக ஸ்டார்-டீவீ (அகில இந்திய தேசத்துரோகம் என்று ஒன்றை உண்மையில் யாரும் செய்து வருபவர்களாக இருந்தால் அது இந்த ஸ்டார்-டீவீ நிறுவனமேயாகும் ), பொfக்ஸ் இன்டர்னஷனல் ஆகிய இரண்டு நாசகார நிறுவனங்களினூடாகவும் 2001ல் முடக்கிவிடப்பட்ட ஒரு சர்வதேச அடக்குமுறை ஆயுதம்.
  ஸ்டார் டீவீ-யின் குறி அற்ப புலத்துத் தமிழ்க் கும்மாளங்களல்ல -தமிழகத்துக்கும் அப்பால் நவீன இந்தியாவை தென்னாசியப் பிராந்தியத்தையும் நோக்கியதுயும் .. அதனூடாக உலகக் கட்டுப்பாட்டு அடக்குமுறைகளுக்கு கைக்கூலிச் சேர்ப்பு என்பது ஒரு மனிதவள தந்திரோபாயமாகவும் நோக்கப் படவேண்டியதொன்று.

  தமிழ் விக்கிபீடியாவிலிருந்து விஜய் தொலைக்காட்சியின் ஒரு வரலாற்று த் துளி பின்வருமாறு:
  “1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய்த்தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லாயா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.”

 2. இலஙகையில்  நடைபெறும்  பணமேசடிகளை  வெளிப்படுத்தும்   ஊடகங்களை  ந்டத்துவோர்  கொல்லப்பட்டால் அதனை தமிழர் ஊடகங்கள்
  அரச  பயங்கரவாதம் என  பெயரிட்டார்கலள்.

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தை  உலகநாடுகள்  பயங்கரவாதமென
  குற்ரம் சாட்டியது  எதற்காக? அவர்கள்  குற்ரம் சாட்டியதற்கும்
  தமிழர்களால்  உலக்மெங்கும்  செய்யப்பட்ட  பணச்சல்வைக்கும்
  சம்பந்தமில்லாமல் இருக்கமுடியாது. அவ்வாறானால்  பணச்ச்லவையின்
  பின்னர்  சட்டரீதியாக்கப்ப்ட்ட   சொத்துக்கள் யார் கைகளிலுள்ளது?

Comments are closed.