“லங்கா” ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அறிந்திருக்கவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச!!!

    பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த எவ்வித குற்றச்சாட்டுக்களோ, பிணையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படாமல் இன்று விடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 29ம் திகதி கைதுசெய்யப்பட்ட சிறிமல்வத்தபாதுகாப்புச் செயலாளரின் மூன்று மாத தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கங்கொடவில நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் இவர் நேற்று   (16) இரகசியக் காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சிறிமல்வத்த சிறைவைக்கப்பட்டதால் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகவும் எனவே அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அலரிமாளிகையில் 15ம் திகதி  மாலை இடம்பெற்ற அரசாங்க ஊடகங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட அரசசார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர் சிறிமல்வத்த தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் எந்தக் காரணத்திற்காக லங்கா  பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ளார். லங்கா பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை தான் அறிந்திருக்கவில்லையென ஜனாதிபதி நேரடியாக பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

3 thoughts on ““லங்கா” ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அறிந்திருக்கவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச!!!”

 1. பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்:

  பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் சாதாரண குடிமக்களாக கருதபடுவதே, இதற்கு காரணம் என்று கூறிய பிறேஷாந்த ஆயினும் அமைச்சர்களுக்கும் மற்றும் இளைய அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென அவர் கூறிய நிலையில்
  மீண்டும் பாராளுமன்றம் ஏப்ரல் மாதத்தில் கூடும்போது மன்றதிற்கு தெரிவானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

  இதை ஐக்கிய தேசியக்க் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக இது எதிர்கட்சியினரை பயமுறுத்தும் ஓர் செயல் என்று கருத்து தெரிவிதுள்ளார்.

  இதே நேரம் இன்று ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் எனக்கோரி மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் சொல்கின்றன.

  மேலும், Messy politics in Sri Lanka

  – Ashok K Mehta

  Sri Lanka is in a royal mess just 10 months after a brilliant but brutal military campaign which vanquished the deadly Tigers fighting for a Tamil Eelam. Rather than consolidating peace, President Mahinda Rajapaksa, spurred by his brother Gothabaya Rajapaksa, the powerful Defence Secretary and former Colonel, has got embroiled in an ugly fight with a former Army Commander, Gen Sarath Fonseka, whom he had arrested on February 8 while he was on a visit to Russia.

  Sri Lanka’s new Rs 1,000 note carries a triumphant Rajapaksa on one face with five Sri Lankan soldiers hoisting the national flag in the iconic image of Iwo Jima on the other. This is unlikely to improve the international image of the country till internal stability is restored. Mr Gothabaya Rajapaksa, his brother’s chief mentor who is in town for the Defexpo, should obtain a presidential order to immediately release Gen Fonseka, mitigating the strategic blunder of his arrest.

  http://www.dailypioneer.com/236562/Messy-politics-in-Sri-Lanka.html

 2. பாதுகாப்புச் செயலாளர்தான் எல்லாக் கூத்துக்கும் காரணம் என்பதை மேன்மை தங்கியவர் ஒத்துக் கொள்ளூகிறார் போல கிடக்கு, ஆக இனி ம்கிந்தாவின்ர பாசிசம் எண்டு எழுதாமல் கோத்தபாயா வின்ர எண்டு எழுதுங்கோ>

 3. நீங்கள் பாவம்!நீங்களே ஏறத் தாழ தடுப்புக் காவலில் தானே இருக்கிறீர்கள்?ஷிராந்தி எச்சரித்தும் கூட கேட் கவில்லையே?

Comments are closed.