றொபர்ட் இவான்ஸ் : புலிகளின் மகாநாட்டில்

இலங்கையின் நிலைமைகளை ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட றொபர்ட் இவான்ஸ் நேற்று( 15) லண்டனில் நடைபெற்ற புலிகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட சம்பவம் குறித்து அறிய கிடைத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஸ் தமிழ் போரம் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று வன்னிப் படைநடவடிக்கைகளை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என கோரி இந்த மாநாட்டை நடத்தியதாக சிங்கள நாளிதழ் கூறியுள்ளது.

இந்த மாநாட்டிற்கு முன்னர் றொபர்ட் இவான்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதுடன் இலங்கைக்கு வழங்கும் வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.