ரோஹித்த போகொல்லாகம உத்தியோகப்பற்றற்ற விஜயங்கள்:3.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு!

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கடந்த சில மாத காலத்திற்குள் லண்டன் நகருக்கு பல தடவை உத்தியோகப்பற்றற்ற விஜயங்களை மேற்கொண்டதன் மூலம் அமைச்சுக்கு 3.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், குறித்த நாட்டிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு, லண்டன் நகருக்குச் சென்று அங்கு சொகுசு ஹோட்டல்களில் தங்கியிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டதன் பின்னரே நாடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, இந்த மேலதிக செலவுகள் வெளிவிவகார அமைச்சுக்கு ஏற்பட்டுள்ளன.
 
 
  வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயங்களுக்கு அமைச்சின் பெண் உயர் அதிகாரியொருவர் உட்பட குழுவொன்று ஆதரவளித்து வருவதாகவும், இம்மாத இறுதியிலும் அமைச்சர் லண்டன் பயணமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவின் நிய+யோர்க் நகருக்கு உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, மக்களின் பணத்தில் மகளின் பிறந்தநாள் கொண்டாடங்களுக்காக 4.5 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்தமை நினைவ+ட்டத்தக்கது.