ரூவாண்டா இனப்படுகொலை குறித்து முக்கிய சந்தேக நபர் மீது விசாரணை.

ruwanரூவாண்டா இனப்படுகொலைகளில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய ஒரு முக்கிய நபர் அதற்கான வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

ரூவாண்டா இனப் படுகொலைகள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன், தான்சானியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தீர்ப்பாயத்திலேயே இந்த நபர் வழக்கை எதிர்கொண்டுள்ளார்.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் இரண்டாயிரம் டூட்ஸி இன மக்களை கொலை செய்தது தொடர்பான வழக்கை கிரிகோர் நஹிமானா எனும் அந்த முன்னாள் மேயர் இந்த தீர்ப்பாயத்தில் எதிர்கொண்டுள்ளார்.

இவர் இந்த ஆண்டின் முற்பகுதியில் காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் தான் இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டிருந்த ஹூடு இனமக்கள் கிளர்ச்சி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இவரை கைது செய்வதற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் டாலர்கள் பரிசு தொகை என்று அமெரிக்க அறிவத்திருந்தாலும், இந்தப் பணத்தை கோர யாரும் முன்வரவில்லை.

BBC.