ருவாண்டா இனப்படுகொலை:கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஆயுள் தண்டனை.

 

1994ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலையுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக தலைநகர் கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடனான ருவாண்டா தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இனப்படுகொலை, கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளிலேயே முன்னாள் மேயர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

சுமார் எட்டு லட்சம் பேர் வரையான டூட்சி மற்றும் மிதவாத ஹூட்டு இன மக்களின் படுகொலைச் சம்பவங்களில் இவர் முக்கிய பங்கு வகித்திருந்ததாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

4 thoughts on “ருவாண்டா இனப்படுகொலை:கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஆயுள் தண்டனை.”

  1. ராஜபக்ச குடும்பம், சரத் பொன்சேக, தேவானந்தா, கருணா ஆகியோருக்கு எப்போது மரண தண்டனை வழங்கப்படும்?

  2. எந்த தவறும் செய்திராத பல இலட்சக் கணக்கான யூத மதத்தினரை அநியாயமக கொலை செய்த பிறகு, உலகத்தையே ஆள வெறி பிடித்து அலைந்த நாஜி இட்லர் கடைசியில் இருந்த இடம் தெரியாமல் அற்பத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதுபோல், மனித வரலாற்றில் என்னற்ற உதாரணங்களை நாம் என்னதான் பல படித்து அ றிநதுகொண்டாலும் இவைகளிலிருந்து இன்றைய காலத்து தலைவர்கள் பாடங்கள் எதையும் கற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அரசன் அன்று கொன்றால், தெய்வம் நின்று கொல்லும் என்பதனை என்றுதான் இவர்கள் உணர்வார்களோ? ஆக மொத்தத்தில், ஆட்சி வெறி, பணவெறி, பதவி வெறி, இனவெறி போன்ற காரணத்திற்காக எப்பாவமும் செய்யாத எளிய சக மனிதர்களை அநியாயத்திற்கு கொலைசெய்து அழித்தால், கொலைகாரர்களுக்கு என்றுமே மன்னிப்பு கிடையாது. பதிவுக்கு நன்றி.

  3. we must bring rajapaksha family into justice … international war criminal court…….

  4. அன்றே கொல்லாத அரசும் ஐ நா சபையும் அநியாயத்திற்கும் அதர்மத்திற்கும் துணை போகின்றன. தாமதாக வழங்கப்படும் தீரப்பு மறுக்கப்பட்ட தீர்ப்புதான் ராஜபக்சே கும்பலுக்கும் கருணா கும்பலுக்கு தீர்ப்பு உறுதி.

Comments are closed.