ருகுணு பல்கலைகழக வன்முறை : தீவிரமடைகிறது.

8/12/2008
இலங்கை ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 பேர் படுகாயமடைந்து நிலையில் மாத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கடந்த சில தினங்களாக வாய்த்தர்க்கம் இருந்ததோடு, இம்மாணவர்கள் இன்று மோதிக்கொண்டனர் என மாத்தரை பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த மாணவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் ஈடுப்பட்ட மாணவர்கள் சிலரையும் கைது செய்துள்ளனர்