ராஜரத்னம் கைது : பங்குச் சந்தை பாதிப்பு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆதரவாளரும்  கடந்த  8 மாதங்களுக்கு  மேலாக இலங்கை அரசுடன்  இணைந்து   முதலீட்டு  வியாபாரம்  மேற்கொள்ளும்  கோடீஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு விலைகள் நேற்று 2 சதவீதத்திற்கு மேலால் வீழ்ச்சியடைந்தன. மோசடி வர்த்தகக் குற்றச்சாட்டில் ராஜ் ராஜரத்னம் கைது செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ராஜரத்னம் பல்வேறு உள்ளுர் வர்த்தகங்களில் பங்குகளை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது