ராஜபட்சவை போர்க்குற்றவாளி – தடையாக இருப்பவர்கள் யார்? – ஆர். நல்லகண்ணு.

கருத்துரிமை களம் என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பேசியதாவது- திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள், செம்மொழி மாநாட்டை பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தா. பாண்டியன் கார் எரிப்பு, பாரதிராஜா அலுவலகம் நொறுக்கப்பட்டது, பழ. கருப்பையாவும் அவரது வீடும் தாக்கப்பட்டது ஆகியவை இதற்கு உதாரணங்கள். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வீட்டில் கல்லெறிந்தவர்களை கண்டறிந்து போலீஸôர் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், பழ. கருப்பையாவை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. நேர்மையான ஒரு ..எஸ். அதிகாரி பழிவாங்கப்படுகிறார். பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கிறிஸ்தவர் என்று சொல்லி பிரச்னை ஏற்படுத்துகிறார்கள். ஜனநாயகம் உயர்த்தி பிடிக்கப்படுகின்ற 21-ம் நூற்றாண்டில் உலகில் எங்கும் நடப்பதை காட்சிகளாக பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ள நவீன உலகில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச சுதந்திரமாக நடமாடுகிறார். ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதில் தடையாக இருப்பவர்கள் யார்? இந்த உண்மையை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் நாகை மீனவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் நல்லகண்ணு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

3 thoughts on “ராஜபட்சவை போர்க்குற்றவாளி – தடையாக இருப்பவர்கள் யார்? – ஆர். நல்லகண்ணு.”

 1. BY THE WAY I FORGOT TO MENTION WHAT I THINK YOU TOLD ME BEFORE YOU HAD SUPPORT KARUNANITHI BEFORE AND MENTION HE IS GOD OF GOD.WHAT HAD CHANGE YOUR MIND THIS TIME.IF YOU HAVENT SAID ANYTHING PRAISING KARUNANITHI WHY THIS TIME?I SUPPOSE YOU HAVE SURRENDER TO JEYALALITHA DONT YOU?

 2. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களே தங்களிற்கு ஓர் பகிரங்க கேள்வி.

  “திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள், செம்மொழி மாநாட்டை பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தா. பாண்டியன் கார் எரிப்பு, பாரதிராஜா அலுவலகம் நொறுக்கப்பட்டது” இது உங்கள் சொந்தப் பிரச்சனை.

  ஆனால், ” நவீன உலகில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச சுதந்திரமாக நடமாடுகிறார். ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதில் தடையாக இருப்பவர்கள் யார்? இந்த உண்மையை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் நாகை மீனவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் நல்லகண்ணு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.” இச் செய்தி ரொம்ப சங்கடப்படுதுதுகிறது.

  \எம்நாட்டுப் பிரச்சனையை நாம் பாப்போம் உங்கள் நாட்டுப் பிரச்னையை நிங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
  தமிழக மீனவர்கள் ஏன் இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவுகிறார்கள்?
  அவர்கள் எல்லைக்குள் மீன் பிடிப்பதுதானே?
  இந்திய மீனவர்களை பாதுகாக்க இந்திய கடலோர காவல் படை எங்கே போனது?
  இந்திய மீனவர்களின் கள்ளக் கடத்தல் தெரியாததா?
  தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச சுதந்திரமாக நடமாடுகிறார் என்று சொல்வதற்கு நிங்கள் யார்?
  முதலில் உங்கள் நாட்டில் உங்கள் பிரச்னையை பாருங்கள், தீருங்கள்.
  புலிகளுக்காக கள்ளக் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பணத்தாசையால் கடத்தலில் ஈடுபடுபவர்களை, பணத்தாசையால் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்களை வைத்தது அரசியல் வியாபாரம் செய்யாதீர்கள்.

  என் சொந்த வாழ்கையில் நான் தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட முறையையும் ஏற்காதவன், அதேநேரம் இக்கொடுங்கோல் புலிப்பாசிசத்தையும் அழித்த விதத்தையும் ஏற்க முடியாத நிலையில் உள்ள ஓர் மானிடன். ஆனால் தர்மம், நீதி, நியாயம், மனட்சாட்சி என்று ஒன்று உள்ளது. எமக்கு உதவிய இந்தியர்களை என்றும் மறக்க மாட்டேன், முக்கியமாக திருச்சி BHEL employees , அவர்களின் குடும்பத்தினர்கள், S.D சோமசுந்தரம், ஜனார்த்தனம் தாயார், அரங்கநாயகம், H .V. Hande இப்படி சிலர் எம் வாழ்க்கையில் பயணித்தவர்கள்.

  ஆனால் இன்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்று சொல்லும் தாங்கள் சீன சார்பா? இரச்ச்ய சார்பா? சரி தாங்கள் எந்த சார்பென்றாலும் தற்போதைய இலங்கை விடயத்தில் சீன சார்பிலோ அல்லது இரச்ச்ய சார்பிலோ என்ன தெளிவான பதிலை தருவீர்கள்?

  தயவு செய்து மனிதாபிமானத்தையும் வியாபாரத்தையும் கலந்து அரசியல் ஆக்காதீர்கள். நாம் பட்ட துன்பம் போதும், எம்மை வாழ விடுங்கள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பார்கள். இன்று எம் தாய் நாட்டை துறந்து புலம் பெயர் நாட்டில் அகதியாக வாழ்கிறோம், அதுவும் பல சுயநலமிக்க எம் தாய்நாட்டை சேர்ந்த பொறுக்கிகள் மத்தியில். தயவு செய்து பல அனுபவங்களை பச்சை பச்சையாகா எழுத வைக்காதீர்கள். எம் நன்றிகளை கொச்சைப்படுத்த வைக்காதீர்கள்.

  பாண்டி பஜார் துப்பாக்கி சம்பவத்தில் சிறையில் இருந்த முகுந்தனை பார்க்க ஆப்பிள் வாங்கி சென்று அதற்க்கு பணம் கேட்ட அரசியல் வாதிகளையும் தெரியும், ஈழத்தமிழருக்காக தம் வீடு வாசல்களை கொடுத்தவர்களையும் தெரியும். நாம் நன்றியுள்ளவர்கள், ஆனால் ஏமாளிகள் அல்ல. தேவையேற்படின் நான் முன்பு எழுதிய இந்திய(தமிழ்நாட்டு)) – இலங்கை உறவு பற்றிய பின்னூடங்களை வாசியுங்கள். இன்றும் விடுதலை புலிகளில் இருந்து கடைசிப் போரில் தப்பினவர்கள் பணத்தாசையுள்ள இந்திய தமிழர்களின் உதவியுடன் Appollo Hospital போன்ற மருத்துவ நிலைகளில் சிஹிச்சை பெற்றுள்ளார்கள். கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் MV Sun Sea கப்பலில் தமிழ் நாட்டிற்கு தப்பியோடிய சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

  நிங்கள் உதவி செய்ய வேண்டாம், உபத்திரவம் தராமல் இருந்தால் போதும், முதலில் நிங்கள் ஓர் உண்மையான இந்தியராக… மானமுள்ள தமிழனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். எமக்கு உதவி தேவைஎன்றால் நேர்மையாக கேட்போம்.

  – ஓர் நன்றாக அனுபவப்பட்டுள்ள அகதித் தமிழன் அலெக்ஸ் இரவி.

 3. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களே!
  கீழிருக்கும் செய்திக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? (மன்னிக்கவும் தாங்கள் சீன சார்பா இரச்சிய சார்பா தெரியாது)

  சீன இராணுவ உயரதிகாரிகள் வன்னிக்கு இரகசிய விஜயம்..!
  இரண்டு சீன இராணுவ உயரதிகாரிகள் திடீரென வன்னிக்கு விஜயம் செய்துள்ளதுடன் முக்கிய இராணுவத் தளங்களில் வைத்து, இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சந்தித்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாரிகளின் விஜயம் குறித்து வன்னியில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. சீன அதிகாரிகள் விசேட பிரதிநிதிகளுக்கான வாகனத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் விசேட பாதுகாப்புடன் வன்னிக்கு சென்றுள்ளனர். இலங்கை இராணுவத்தினர் மற்றும் பெரும்பான்மையின குடும்பங்களை குடியேற்றுவதற்காக அரசாங்கம் வன்னியில் சீனாவின் உதவியுடன் அமைத்துவரும் நிரந்தர வீடமைப்புகள் மற்றும் விசேட முகாம்கள் என்பவை தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த சீன அதிகாரிகள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
  செய்தி ஆதாரம்: http://www.athirady.info/2010/08/07/101791

Comments are closed.