ராஜபக்ச பிரதம விருந்தினர் : இந்தியாவின் ஒப்புதல் வாக்குமூலம்

இந்திய ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களின் “கூட்டு” அழைப்பை எற்று ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்லது. பிரித்தானிய மகாராணியின் சார்பாகக் கலந்துகொள்ளும் இளவரசர் எட்வார்ட் உடன் இணைந்து ராஜபக்ச நிகழ்வை நிறைவு செய்துவைப்பார்.

“இலங்கை அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பலர் உணர்ந்துவருகின்றனர்” என இது குறித்து கார்டியன் செய்தி இதழுடன் பேசிய ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

2018 இல் இதே விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை தனது சொந்தக் கிராமமான ஹம்பாந்தோட்டையில் நடத்த ராஜபக்ச எதிர்பார்ப்பதாக கார்டியன் மேலும் தெரிவிக்கிறது.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், ராஜபக்ச நடத்திய இனவழிப்பில் தனது பங்கையும் இந்திய அரசு மறைமுகமாக அங்கீகரிப்பதாகவே இச்செயல் அமைந்துள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக இந்தியாவை நிறுத்த முனைகின்ற இந்திய அரச ஆதரவு தமிழ்த் தேசிய வாதிகளுக்கு இந்நிகழ்வு நேரடியான பதிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் ஆதரவை வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற அரசியற் கட்சிகளின் சந்தர்ப்பவாதப் போக்குகள் சந்திக்கு வந்திருக்கிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், பொதுநலவாய நாடுகள் குறித்த பிரித்தானியாவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ராஜபக்ச தலைமைதாங்கும் பேரினவாத அரசுடன் இந்திய அரசு இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு இது ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது.

5 thoughts on “ராஜபக்ச பிரதம விருந்தினர் : இந்தியாவின் ஒப்புதல் வாக்குமூலம்”

 1. தமிழக் வைகோ,ஜெயலலிதா போன்ற சந்தர்ப்பவாதிகள் இரண்டு பக்கமும் கால் வைத்து நடுக்கடலில் விழுந்து கிடக்கிறார்கள் ராசபக்ச கத்தரித் தோட்ட வெருளீ மாதிரி வெளீக்கிட்டு தோட்டம் கொத்தவே போகிறார்,இவரைக் கூப்பிட்டது மேடையில் இருத்தவே,மேடையில் ஏற்ற அல்ல.அம்பாந்தோட்டத்தில இவர் முதல்ல ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டட்டும்,கனவு காணூறதுக்கும் ஒரு தகுதி வேணாமே?

 2. போட்டிகளின் துவக்க நாளில் இலங்கை அணி அணிவகுப்பில் கலந்து கொண்ட பொழுது தொலைகாட்சி வர்ணணையாளர். நிறவெறி கொண்ட நாடு என்றும் பலரை கொண்று குவித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று வர்ணணை செய்தார்.

 3. “லட்சக்கணக்கில் தமிழரை கொன்றாயா ,நல்லது, இங்கு வா விளையாட்டை ரசி,விருந்து சாப்பிடு,” என்று வடநாட்டு தமிழ் விரோதிகள் அழைப்பு விட்டிறுப்பதாகவே எண்ணத்தோன்ற்கிறது. சண்டாளர்களுக்கு சாவு வராதா????

 4. ராஜபக்ச பிரதம விருந்தினர் என்கிற செய்திக்கு, கருத்தூட்டமிட்டவர்களை பரிதாபகரமானவர்களென்றே எண்ணத்தோன்றுகின்றது. ராஜபக்சவை இந்திய அரசோ, அல்லது ஐ.நாவோ தட்டிக்கேட்கும் என்று நம்பியவர்களின் தலையில் அடித்தது போல் அமெரிக்காவின் ஐ.நாக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ராஜபக்சஅழைக்கப்பட்டார். இப்போ ராஜபக்ச இந்தியாவில் பிரதம விருந்தினராக்கப்பட்டுள்ளார்.நம்பியும் புலம்பியும் கெட்ட இனம் என் தமிழ் இனம். இப்படித்தான் நடக்கும் என்றறிந்த பிறகும் சிலவேளை நடக்குமோ என்கின்ற சந்தேகத்தோடே எல்லாக்காரியங்களும் தமிழர் தரப்பில் நடைபெற்றுப் போகிறது. ராசபக்ச கத்தரித் தோட்ட வெருளீ என்று தமிழ்மாறன் சொல்லி இப்போ சந்தோசப்படுவதைப்போலத்தான் முன்பு தமிழர்கள் மகிந்த மடையன் என்றார்கள். அந்த மடையனால் ஒட்டு மொத்தம்தமிழினமும் மடையர்களாக்கப்பட்டது நடந்த செய்தி. ஆகவே மண்டை இருப்பது சிந்திக்க என்பதால் சிந்தியுங்கள் செயற்படுங்கள்.கருத்தூட்டமிடுங்கள்.

 5. When the great leader Selva approached EVR, he told him that the Tamil in India are slaves of Delhi and a slave can not help another slave. The total Tamil people forgotten these words of Periyar. That is the reason we are failing in all fronts including Tamil Ealam issue.

  The logic we should always remember and propagate is that all brahmins are not intellectuals. There are people with different level of I.Q from bottom to top within brahmins. Similarly there are people with different level of I.Q from bottom to top within other communities. But, when education and job opportunities are concerned lion share is taken away by brahmins in the guise of competency. It is perfectly against natural justice and solid proof that the system is fault and it allows incompetent people only to climb up. In order to clean the system, proportionate reservation for F.C., B.C., S.C. S.T. and Religious minority in proportion to their population should be given. By this system the brahmins whose I.Q. is low should be forced to do unskilled low paid jobs. Similarly oppressed people whose I.Q is high should be given top level jobs. if the jobs at all levels are not represented by people of all communities it should be clearly declared that malpractices have been played. Those who don’t accept low I.Q brahmins for low level jobs or that there is no brahmin with low I.Q. they should be declared as criminals against nation. It is not enough, if oppressed people are given place at decision making level. it should be clearlay ensured that brahmins are not over represented at decision making level. Unless we complete this duty, all our other exercises will meet only failure. So, first let us relieve ourselves from all other unnecessary works and concentrate only on proportionate reservation for F.C., B.C., S.C., S.T.& Religious minorities according to their population at all levels.

  If we succeed in this mission we will succeed in all our attempts. If we don’t succeed in this issue then we will never succeed in any issue. Please remember that Tamil Ealam failed only because brahmins did not like it and only brahmins people subverted to them alone are at decision making level.

  Please understand Periyar’s words in letter and spirit.

Comments are closed.