ராஜபக்சவிற்குப் பதிலாக சிறீதரன் எம்.பியும் மாவை சேனாதிராசாவும்

tna_lycaஇலங்கையில் மகிந்த ராஜபக்ச என்ற கொடூரமான இனக்கொலையாளியைப் பொது நலவாய நாடுகளின் தலைவாராக்குவதற்காக நடைபெற்ற அதன் உச்சி மாநாடு நடைபெற்றது. இலங்கைக்கு பல்தேசிய வியாபார நிறுவனங்களை அழைத்துவந்து முதலீடு என்ற பெயரில் சுரண்டலுக்கு வழி திறந்துவிடுவதற்காக அந்த மாநாட்டின் நடுவே பொது நலவாய நாடுகளின் வர்த்தப் பேரவை மாநாடும் நடைபெற்றது. பெரும் பணச்செலவில் மகிந்த ராஜபக்சவை உலக முதலாளிகளின் இலாப வெறிக்கு அறிமுகப்படுத்துவதற்காக நடைபெற்ற நடைபெற்ற வர்த்தகப் பேரவை மாநாடு லைக்கா மோபைலின் ஆதரவோடு நடைபெற்றது.

லைக்கா மோபைல் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கான கோல்டன் ஸ்பொன்சராக மாறியிருந்து. லைக்கா விளம்பர பனர் பின்னால் மிளிர இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ச முன்னாலிருந்து கைகளை உயர்த்தி பணக்காரர்களை வரவேற்கும் நிழல் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அன்றிலிருந்து லைகாவிற்கும் ராஜபக்சவிற்கும் இடையேயான தொடர்புகள், வியாபார பேரங்கள் அனைத்தும் தமிழ் ஊடகப் பரப்பில் வெளியாக ஆரம்பித்தன.

ஒக்ரோபர் 4ம் 5ம் திகதிகளில் ஜேர்மனியில் மீண்டும் ராஜபக்ச மாநாடு நடத்துகிறாரா என்று ஒரு தடவை பலரையும் சிந்திக்கவைத்தது. அந்த மாநாட்டு மேடையின் பின்பகுதியை லைக்கா மொபைல் நிறுவனத்தின் விளம்பரங்கள் அலங்கரித்திருந்தமையே குழப்பத்திற்கான காரணம். விளம்பரத்திலேயே கொமல்வெல்த் மாநாட்டில் எழுதப்பட்டிருந்தது போல லைக்காவின் ஆதரவில் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தத் தடவை ராஜபக்ச இல்லை. அவருக்குப் பதிலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழரசுக் கட்சியின் ‘மாண்புமிகு’ தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெடிகுண்டு சிறீதரன் எம்.பி ஆகியோருடன் சில காவி உடைகளும் பிரசன்னமாகியிருந்தன. கத்தி படத்தையும் களியாட்டங்களையும் ஸ்பொன்சர் செய்யும் லைக்கா இந்தத் தடவை 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை ஸ்போன்சர் செய்திருந்தது. இங்கு ராஜபக்சவைப் பிரதியிட்டிருந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

புலம்பெயர் நாடுகளில் ஊடகங்கள், களியாட்டங்கள், மஞ்சள் பத்திரிகைகள், சினிமாக் கூத்துக்கள், பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புக்கள் போன்றன மட்டுமல்ல இனக்கொலையும் தமிழ்த் தேசியமும் கூட லைக்காவின் பணம் வழி நடத்துகிறது. பாவம் மக்கள்.

tna_lyca1tna_lyca2tna_lyca3

10 thoughts on “ராஜபக்சவிற்குப் பதிலாக சிறீதரன் எம்.பியும் மாவை சேனாதிராசாவும்”

 1. Lyca came from the scratch… & with worldwide competition…
  Lyca giving good long distance phone rates & they sponsor all…
  What is the alternative solution from Inioru…?

   1. Mr. When we use Viber in other side they need a Wi Fi network… I’m not talking with the people who have the internet facility… Mostly I talk with the needy people there… If u suggest a cheaper way, I wish to change it. 

  1. சுயநலத்தின் உச்சக் கட்டம்!

  2. தமிழரின் பண்பாட் மட்டுமல்ல உலகெலாம் உய்ய ஒரேவழி சமூக உணர்வு ஓங்குதல்.
   தமிழருக்கு நடக்கும் மாபெரும் விபரீதம் சுயநலத்தன்மை மக்களிடயே உயர்த்தப்படுவது.
   இனஞ்சார்ந்த விடயங்களில் சுயநலத்தன்மை அவ் இனம் அழியுந் தர்வாயில் இருப்பதற்கு ஒரு முக்கிய அறிகுறி.

   1. சுயநல வாதிகளினால் அழிக்கப்பட்ட இனத்தின் மறு வடிவமே   இந்த விழாக்கழும்  விளம்பரதாரர்கழும். இலங்கைத் தமிழினத்தின் அழிவிற்கு
    காரணமென்ன என்பதனையும்  அதற்கு உடந்தையானவ்ர்கள் யார் என்பதனையும் ஆராய துணிவில்லாதவ்ர்கழும்,அந்த அழிவிற்கு காரணமாக் இருந்தவ்ர்கழும்  தமது சுய விளம்பரத்திற்காக ஆசைப்பட்டவர்களினதும்  ஒன்று  கூடலே இதுவாகும்.

 2. இந்த மகாநாட்டின்   ஆரம்ப  ஸ்தாபகர்களிடமிருந்து  (தமிழகம்,மலேசிய)
  இரண்டாக  பிரித்து புலிகளின்  முக்கியஸ்தர்கள்  தங்கள் கைகளில் எடுத்துக்
  கொண்டார்கள். இதனை  ஒரு வர்த்தக  ஸ்தாபனம் போல் கனடாவில் பதிவு
  செய்துள்ளார்கள். (பணச்சலவையின்நோக்கமாக இருக்கலாம்). 
  https://opencorporates.com/companies/ca/3771881
  INTERNATIONAL MOVEMENT FOR TAMIL CULTURE (IMTC)
  3771881
  Active
  Corporation
  Canada
  2100 ELLESMERE ROAD, SUITE 105, TORONTO ON, M1H 3B7, Canada
  Canada
  VEL VELUPPILLAI, director
  THURAI GANESALINGAM, director
  SUBRAMANIAM THYAGALINGAM, director
  RAMASAMY KANAGARATNAM, director
  VISU SELVARAJAH, director
  VEL GOVINDAN, director
  R. RAJASOORIYAR, director
  MICKY CHETTY, director
  P.K. SHANMUGAM, director
  T. KALAIMANI, director
  V.S. THURAIRAJAH, director
  N.R. WICKIRAMASINGAM, director

  1. எந்தப்பணத்த எப்படி சலவை செய்யன்னு சொல்லலாமே, சும்மா மொட்டயா பழிபோடாம.

   1. முதலில்  தமிழ் கலாச்சாரத்திற்கும்    ஒவ்வொருநாட்டிற்கும்
    டிரக்ரராக  நியமிக்கப்பட்டுள்ளவ்ர்களிற்கும்  என்ன சமப்ந்தம் என்பதையும்
    அவர்களின்  பின்புலம் என்னவென்பதையும்  சிந்திக்கவும்.

 3. ப.தே. கம்பனிகள், முதலாளித்தவம் என்றெல்லாம் வறட்டு வாதங்களை இனியொருவில் முதல்நாள் பதிந்துவிட்டு அடுத்தநாள் ஒரு பவுண் விலைவித்தியாசத்திற்காக பக்கத்து கடை நண்பனை புறக்கணித்து 2 பவுண் எரிபொருளிற்கு கூடுதலாக செலவழித்து ரெஸ்கோ(TESCO) வில் சமான் வாங்கும் வறட்டு இடதுசாரிகள். ஊருக்குத்தான் உபதேசமோ?

Comments are closed.