ரஷ்யா – வெனிசுலா கடற்படைகள் கூட்டுப்பயிற்சி!

07.09.2008.

காரகஸ்:

வரும் நவம்பரில் வெனி சுலா கடற்பகுதியில் ரஷ்ய கடற்படையுடன் வெனி சுலா கடற்படை கூட்டுப் பயிற்சி செய்யப் போவதாக வெனிசுலா அரசு அறிவித் துள்ளது.

இப்பயிற்சியில் நான்கு ரஷ்யக் கப்பல்கள் பங்கேற் கும். அவற்றுடன் வெனி சுலாவின் நீர்மூழ்கி கப்பல் களும், படை விமானங் களும் பயிற்சியில் ஈடுபடும். நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெறும் பயிற்சியில் ஆயிரம் ரஷ்யத் துருப்பு களும் பங்கேற்கின்றனர் என்று வெனிசுலா கடற் படை தளபதி ரியர் அட் மிரல் சல்படோர் கம்மரடா கூறினார்.

முதல் முறையாக அமெ ரிக்க கண்டத்தில் நடக்கும் கூட்டுப்பயிற்சி முக்கியத் துவம் உடையது என்று அவர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

அரசியல் விளைவுகள்

கடந்த மாதம் ஜார்ஜியா வில் ரஷ்யா எடுத்த நடவடிக் கைகளை சாவேஸ் வர வேற்றார்.

மாஸ்கோவின் ‘புதிய உலக வல்லமை’யைக் கண்டு அமெரிக்கா மிரண்டு விட்டதாக அவர் குறிப்பிட் டிருந்தார்.

அமெரிக்காவுக்கும், வெனி சுலாவுக்கும் இடையே சுமு கமான உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கும் அமெ ரிக்காவுக்கும் இடையே அரசியல் உறவுகள் மோசம் அடைந்துள்ளன. இவ் வேளையில் ரஷ்ய கப் பற்படை கப்பல்கள் வரு வதை அமெரிக்கா எவ் வாறு அணுகும் என்ற கேள்வி எழுவதும் இயற் கையே. மேலும் எரிசக்தி துறையில் ரஷ்யாவுடன் வெனிசுலா வைத்திருக்கும் உறவு ஏற்கெனவே அமெ ரிக்காவின் கண்களை உறுத்தி வருகிறது. வெனி சுலாவில் மூன்று ரஷ்ய எரிசக்தி நிறுவனங்கள் செயல்பட வெனிசுலா அனு மதித்துள்ளது.